சிம்பு திருமணம் குறித்து பேசிய நடிகை..!

சிம்புவுக்கு எப்போது திருமணம் ஆகுமோ என நடிகை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பேசுபொருள் ஆகியிருக்கிறது.

Update: 2024-06-17 05:00 GMT

சிம்புவுக்கு எப்போது திருமணம் ஆகும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்க, நடிகை ஒருவர் அது குறித்த பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

நடிகை ரேமா அசோக் சின்னத்திரை தொடர்களில் பிரபலமானவர்.நாச்சியார்பரும், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் ரேமா அசோக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் அதில் சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ அப்போதுதான் எனக்கும் திருமணம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

சிம்புவுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்படி ஒரு பொருத்தம். கமல்ஹாசனைப் போல அனைத்து துறைகளிலும் வல்லவராக இருக்கும் சிம்பு, சர்ச்சைகளுக்கும் பிரபலமானவர். ஷூட்டிங் லேட்டாக வருவார் என்று சொன்னதிலிருந்து, பீப் சாங் வரை அவர் மீது சுழன்றடித்த சர்ச்சைகள் பல. நயன்தாராவுடன் காதல், முறிவு, ஹன்சிகாவுடன் காதல், அடுத்து சண்டை, மைக்கேல் ராயப்பன், வேல்ஸ் பட நிறுவனத்துடன் சண்டை என பல சர்ச்சைகள் அவரைச் சுற்றி இருக்கையில், திருமணம் ஆகாமல் இன்னமும் பேச்சுலராக சுற்றி வருவதும் அதிகம் பேசப்பட்ட விசயமாக இருக்கிறது.

சிம்பு தற்போது மாநாடு, பத்து தல என டாப் கியரில் பயணித்து வருகிறார். அடுத்ததாக தக் லைஃப், எஸ்டிஆர் 48 என ஒப்பந்தமாகி தனது அடுத்த இன்னிங்ஸை அடித்து ஆட தயாராகி இருக்கிறார் சிம்பு. மணிரத்னம், கமல்ஹாசன் என மாபெரும் லெஜண்ட்கள் இணையும், தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு மிகப் பெரிய ரோலாம். இப்படி இருக்கையில் மீண்டும் அவரை திருமண சர்ச்சையில் சிக்க வைக்க திட்டம் நடக்கிறதோ என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Tags:    

Similar News