உலகை திரும்பி பார்க்க வைத்த பாயல்..! யார் இவர்?

பாயல் கபாடியாவின் இயக்கத்தில் உருவான "ஆல் வி ஈமேஜின் ஆஸ் லைட்" என்ற திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவின் பிரதான போட்டிப்பிரிவில் இடம் பிடித்த முதல் இந்திய திரைப்படம்;

Update: 2024-05-27 10:00 GMT

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொண்டாட்டம்! கேன்ஸ் திரைப்பட விழாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான கிராண்ட் பிரிக்ஸ் விருதை இந்திய இயக்குநர் பாயல் கபாடியா வென்றுள்ளார். இது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும்.

பாயல் கபாடியாவின் இயக்கத்தில் உருவான "ஆல் வி ஈமேஜின் ஆஸ் லைட்" என்ற திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவின் பிரதான போட்டிப்பிரிவில் இடம் பிடித்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. இதுவே இந்தப் போட்டிப்பிரிவில் இடம் பிடித்த முதல் இந்திய பெண் இயக்குநரின் படைப்பு என்பது கூடுதல் சிறப்பு.

இந்த வரலாற்று வெற்றிக்கு பிரதமர் மோடி அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பாயல் கபாடியாவின் திறமையையும் படத்தின் சிறப்பையும் பாராட்டும் குவியல் நீள்கிறது.

இந்த வெற்றி மூலம் இந்திய சுதந்திர சினிமா உலக கவனத்தை ஈர்த்துள்ளது. இனிவரும் காலங்களில் சுதந்திர சினிமா இயக்குநர்களுக்கு மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் பிறந்த பாயல் கபாடியா கலைஞர் நளினி மலானியின் மகள். இவர் ஆந்திராவில் உள்ள ரிஷிவேலி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பையும், மும்பையிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டமும் பெற்றார். புனே திரைப்பட கல்லூரியிலும் பயின்றவர், இந்திய சினிமாவுக்கு உலக அளவில் பெருமை தேடித் தந்துள்ளார். தனது முதல் ஆவணப்படம் எ நைட் ஆஃப் நோயிங் நத்திங் மூலம் கேன்ஸ் திரைப்பட விழாவில் 2021ம் ஆண்டு கோல்டன் ஐ விருதை பெற்றிருந்தார். 

Tags:    

Similar News