கௌதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சமந்தா!

கௌதம் மேனன் இயக்கத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா.

Update: 2024-06-12 11:45 GMT

கௌதம் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் மம்மூட்டி ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


நயன்தாரா பொதுவாகவே தமிழ் சினிமாவில் அதிகம் கட்டுப்பாடுகளை விதிக்கும் நடிகையாக இருக்கிறார். புரமோசனில் கலந்து கொள்ள மாட்டேன், வெளிநாட்டு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டேன் என பல கண்டிசன்களைக் கூறுவாராம். இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்கிறாராம்.


இவர் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்திலும், தமிழில் நீதானே என் பொன் வசந்தம் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.  சொல்லப்போனால் சமந்தாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே கௌதம் மேனன்தான் என்று கூட சொல்ல முடியும். தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை இயக்கியபோது அதில் கேமியோ ரோலாக சமந்தா வருவார். 


சிம்பு, திரிஷா இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் சிம்பு இயக்குநராக வரும் காட்சியில் சமந்தாவும் நாகசைத்தன்யாவும் நடித்திருப்பார்கள். இதுவே அவரது முதல் ஆன் ஸ்க்ரீன் திரைப்படமாக அமைந்தது. அதேநேரம் தமிழில் அவர் முழுநீள கதாநாயகியாக நடித்தது பானா காத்தாடி திரைப்படத்தில்தான். 

கௌதம் மேனன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தில் நாயகனாக மம்மூட்டி நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாராவை ஒப்பந்தம் செய்தவர்கள், அவர் அதிக கண்டிசன் போடுவதால் வேண்டாம் என்று நினைத்திருக்கிறார்கள். 


நயன்தாராவைப் பொறுத்த வரையில் அவர் சென்னையிலேயே முழு ஷூட்டிங்கையும் எடுக்க சொல்கிறாராம். தன் மகன்களைக் கவனிக்க அவர் சென்னையிலிருந்து வெளியே எந்த ஊருக்கும் வரமாட்டேன் என்கிறாராம். இதுமட்டுமின்றி, அவரது சம்பளமும் அதிக அளவில் இருப்பதால் தயாரிப்பாளர்கள் நயன்தாரா வீட்டு பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள். 


70 வயதைக் கடந்த நிலையிலும் ஹேண்ட்சமாக இருக்கும் மம்மூட்டி, ஒரு வருடத்தில் 3 படங்களைக் கொடுத்து அனைத்தும் ஹிட் லிஸ்டில் சேர்க்க வைத்துவிடுகிறார். அவரின் கதைத் தேர்வு, விளம்பர யுக்தி மிகவும் பாராட்டப்படுகிறது. அவரது சமீபத்திய படங்களான, நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்கோட், காதல் தி கோர் என அடுத்தடுத்த படங்கள் அவரது தயாரிப்பிலேயே வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த படமும் அவரது மம்மூட்டி பட நிறுவனத்திலேயே தயாராகிறது. 


மம்மூட்டி நடிப்பில் வெளியான டர்போ திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளதால், அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

Tags:    

Similar News

கொடி (2016)
எல்கேஜி (2019)
சர்கார் (2018)
ஜோக்கர் (2016)