ரசிகையின் தாலியில் தனது படம்..! அதிர்ந்து போன நடிகர்...!

நடிகர் மோகன் தனது பேட்டியில் ஒரு ரசிகையைப் பார்த்து அதிர்ந்ததாக கூறியுள்ளார்.

Update: 2024-06-17 10:45 GMT

தாலியில் தன் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகன், அதுகுறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மோகன் நடிப்பில் ஹரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை அடுத்து படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளுக்காக பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்தார் மோகன். அதில் அவருடன் நடித்தவர்கள், நடித்த படங்களின் அனுபவம் குறித்தும் அடுத்த இன்னிங்ஸ் குறித்தும் பேசியிருந்தார். அந்த வகையில் ஒரு ரசிகை குறித்து பேசும்போது அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக கூறியிருந்தார்.

கமல்ஹாசன் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான கன்னடப் படமான கோகிலாவில் அறிமுகமானவர் மோகன். பின் தமிழிலும் சில படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமானார். சில இடைவெளிக்கு பிறகு தமிழில் மூடுபனி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, காற்றுக்கென்ன வேலி, லாட்டரி டிக்கெட், கோபுரங்கள் சாய்வதில்லை என வரிசையாக பல படங்கள் கைவசம் வந்த நிலையில், தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். அடுத்தடுத்த ஹிட் படங்கள் அவர் மீதான வெளிச்சத்தை பாலுமகேந்திரா, பாலச்சந்தருக்கு காட்டின. இதனால் அடுத்து கிளாசிக் படங்களில் நடித்து அதிலும் வெற்றி பெற்றார்.

மௌன ராகம், மெல்ல திறந்தது கதவு, உதய கீதம் என எவர்கிரீன் படங்களில் நடித்து நல்ல நடிகர் எனும் பெயரையும் பெற்றார். அப்போது கமல்ஹாசனுக்கு நிகரான பெண் ரசிகர்கள் மோகனுக்கும் வந்தார்கள். 80களின் சாக்லேட் பாயாக வலம் வந்தார் மோகன்.

ஒருமுறை அவர் விமானத்தில் வந்திருந்த போது அருகில் அமர்ந்திருந்த ரசிகை அவரிடம் தன் தாலிச் செயினை காட்டியிருக்கிறார். அதில் ஒரு லாக்கெட் இருந்துள்ளது. அந்த லாக்கெட்டை திறந்து பார்த்தால் அதில் மோகன் புகைப்படம் இருந்துள்ளது. இதைப்பார்த்து தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் மோகன். ரசிகையோ இதை சாகும் வரை வைத்துக் கொள்வேன் என்று கூறியதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News