50 கோடியைக் கடந்த மார்க் ஆண்டனி! அடுத்த 100 cr?
மார்க் ஆண்டனி திரைப்படம் இப்போது 50 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.;
விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 4 நாட்களில் 55 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயாகர் சதுர்த்தி விடுமுறையுடன் அதிகபட்ச வசூல் வேட்டையை ஆடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் நாளே தமிழ்நாட்டில் 8 கோடி ரூபாய் வசூலையும் உலகளவில் 12 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டிய மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் முதல் ஏகப்பட்ட விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கிய நிலையில், ரசிகர்களும் படம் பட்டைய கிளப்புது என word of mouth வெளியிட 4 நாட்களும் தியேட்டர்களில் மாஸ் காட்டி வருகிறது.
விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவருமே இந்த படத்தில் போட்டிப் போட்டு நடித்துள்ளனர். செல்வராகவன் கண்டுபிடிக்கும் டைம் டிராவல் டெலிபோனை பற்றி முதல் ஷாட்டில் இருந்தே சொல்லி படத்துக்குள்ளும் கார்த்தியின் குரலில் மார்க் ஆண்டனியின் உலகத்தையும் நமக்கு புரிய வைத்து விட்டார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
மேலும், கடைசி வரை நடிப்பு அரக்கனுக்கு டஃப் கொடுக்க கடும் உழைப்பை புரட்சி தளபதி விஷால் போட்டிருப்பதும் அதற்கான ஸ்கோப்பை இயக்குநர் கொடுத்திருப்பதும் தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.
விஷாலுக்கு முதல் 100 கோடி?
விஷால் நடித்த திரைப்படங்கள் இதுவரை 100 கோடி வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் எல்லாம் விஷாலுக்கு பின்னர் வந்து அசால்ட்டா பல செஞ்சுரி அடித்த நிலையில், மார்க் ஆண்டனி விஷாலையும் 100 கோடி கிளப் ஹீரோவாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
4 நாள் வசூல் எவ்வளவு?
ஞாயிற்றுக்கிழமை வந்ததை போலவே விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளான திங்கட்கிழமையும் மக்கள் மார்க் ஆண்டனி திரையிட்ட தியேட்டர்களுக்கு படையெடுத்த நிலையில், 4 நாட்களில் 50 கோடி வசூல் வேட்டையை விஷால் படம் நடத்தியுள்ளது என்கின்றனர். 55 கோடி ரூபாய் வசூல் இதுவரை வந்துள்ளதாகவும் 2வது வார முடிவில் கண்டிப்பாக 100 கோடி வசூலை இந்த படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் வெற்றிக்கான காரணங்கள்:
- விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் சிறப்பான நடிப்பு
- டைம் டிராவல் என்ற புதிய கதைக்களம்
- ஆக்ஷன், காமெடி, த்ரில்லர் என அனைத்தும் கலந்த திரைக்கதை
- ஜிவி பிரகாஷின் பின்னணி இசை
முடிவுரை:
விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் 4 நாட்களில் 55 கோடி வசூல் செய்து ஒரு சாதனை படைத்துள்ளது. இந்த படம் விஷாலுக்கு முதல் 100 கோடி வசூல் படமாகவும் மாற வாய்ப்புள்ளது.