leo copycat ஆட்டையைப் போட்ட அனிருத்? போச்சு கேஸுதான்!

அனிருத் மீண்டும் காப்பி கேட் சர்ச்சை;

Update: 2023-10-24 05:00 GMT

அனிருத் மீண்டும் இசை திருட்டில் ஈடுபட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் அவரின் புகழுக்கு மீண்டும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

சினிமாவில் காப்பி என்பது மிகச் சாதாரணமான ஒன்று. ஒன்றைக் காப்பி அடித்து இன்னொன்றை உருவாக்கி அதனை இன்ஸ்பிரேசன் என்று சொல்லிவிடுவார்கள். பல கொரியன் கதைகளை அப்படியே காப்பி அடித்து தமிழில் மிகப் பெரிய அளவில் ஹிட்டாக்கிவிடுவார்கள்.

சிலர் உண்மையிலேயே இன்ஸ்பயர் ஆகி அந்த ஒரிஜினல் படத்தை விட மிக சூப்பராக எடுத்துவிடுவார்கள். அந்த வகையில் இயக்குநர் அட்லீ பல படங்களிலிருந்து காட்சிகளில் இன்ஸ்பயர் ஆகி அதனை புதிய படமாக கொடுப்பதில் வல்லவர்.

ஒரு கதையை முன்மாதிரியாக கொண்டு அதனை வேறு வடிவத்தில் எடுத்தாலும் அந்த கதைக்கு உரிமையானவருக்கு கிரிடிட் கொடுப்பதும் அதற்கான உரிமத்துக்காக பணம் கொடுப்பதும் கடமை. ஆனால் பலரும் இதை செய்வதில்லை.

கதை, திரைக்கதை ஒரு பக்கம் இருந்தால் இசைக் கலைஞர்களின் உழைப்பை எடுத்து பயன்படுத்துவதும் இன்னொரு வகை. தேவா முதல் பல இசையமைப்பாளர்கள் இதனை உருவி பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் காலக்கட்டத்தில் பெரிய அளவில் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லை. யாருக்கும் தெரியாததால் அவர்கள் தப்பித்துக்கொண்டனர்.

ஆனால் இன்றைய இணைய யுகத்தில் அனிருத் எதை தொட்டாலும் அது காப்பி என்று அடித்துக் கொள்கின்றனர். அவரே பல முறை காப்பி வேறு ரைட்ஸ் வாங்கி பயன்படுத்துவது வேறு என்று விளக்கம் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் லியோ படத்துக்கு அனிருத் போட்டிருக்கும் ஒரு இசையின் துவக்கம் வேறொரு ஆங்கில பாடகரிடமிருந்து திருடிவிட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். விஜய் படம் என்பதால் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் இதனை மிகவும் காட்டமாக செய்துகொண்டிருக்கின்றனர்.



Tags:    

Similar News