முத்தழகு சீரியலில் முத்தக் காட்சி! வைரலாகும் வீடியோ!
முத்தழகு சீரியலில் முத்தக் காட்சி இருப்பதாக பரபர என இணையதளங்களில் வைரலாகி வருகிறது ஒரு செய்தி.
முத்தழகு சீரியலில் முத்தக் காட்சி இருப்பதாக பரபர என இணையதளங்களில் வைரலாகி வருகிறது ஒரு செய்தி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இளைஞர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வரும் இந்த தொடரில் காதல் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருப்பதால் இளைஞர்கள் அதிக அளவில் பார்க்கும் சீரியலாக இருக்கிறது.
முத்தழகு சீரியலின் 500வது எபிசோட் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த எபிசோடில் கதாநாயகனும் அவரது மனைவியான கதாநாயகியும் காதல் செய்யும் காட்சிகள் பின்னணியில் சினிமா பாடல் ஒலிக்க எடிட் செய்யப்பட்டுள்ளது.
ஆஷிஷ் சக்ரவர்த்தி ஹீரோவாகவும், ஷோபனா நாயகியாகவும் நடித்துள்ள இந்த தொடரின் முத்தக் காட்சி நிறைந்த எபிசோட் புரோமோ இதோ