டாடா ஓடிடி ரிலீஸ்! எந்த ஓடிடியில் பாக்கலாம்?

Dada Movie Release OTT Platform-டாடா படத்தை தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் இனி ஓடிடியில் கண்டு ரசிக்கலாம். எந்த ஓடிடி தளம், எப்போது ரிலீஸ் உள்ளிட்ட தகவல்கள் இங்கே!

Update: 2023-03-10 10:43 GMT

Dada Movie Release OTT Platform

Dada Movie Release OTT Platform-ஓடிடி தளத்தில் கவின் நடித்த டாடா திரைப்படம் வெளியிடப்பட்டு இப்போது ஸ்ட்ரீமிங் ஆகிக் கொண்டிருக்கிறது. எந்த ஓடிடி தளம், எப்போது வெளியானது உள்ளிட்ட தகவல்களைக் காண்போம்.

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இன்று ஓடிடியில் வெளியாகியிருக்கிறது டாடா திரைப்படம். லிப்ட் படத்தைத் தொடர்ந்து கவின் நடித்திருக்கும் இரண்டாவது திரைப்படம். கவின் நடித்து திரையரங்கில் வெளியான முதல் திரைப்படம் என பல விசயங்களைச் சுமந்து வெளியாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கிறது? கதை என்கேஜிங்காக இருக்கிறதா? திரைக்கதை சுவாரஸ்யம் இருக்கிறதா? கவின் உள்ளிட்ட மற்ற அனைவரின் நடிப்பும் எப்படி இருக்கிறது உள்ளிட்ட பல விசயங்களை அலசுவோம்.

கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவராக வரும் மணிகண்டன் (கவின்) உடன் படிக்கும் மாணவி சிந்து (அபர்ணா தாஸ்) இருவரும் காதலிக்கிறார்கள். பல இடங்களில் சுற்றித் திரிந்தும் தனிமையிலும் காதலை வளர்க்கிறார்கள். கவனக்குறைவாக இருந்ததால் கல்லூரி படிப்பை முடிக்கும் முன்னரே கர்ப்பம் தரிக்கிறார் சிந்து. இதனால் பெற்றோர்கள் கைவிட, நண்பர்களின் உதவியுடன் சிறிது சமாளிக்கிறார்கள். பணக் கஷ்டம் இவர்களை போட்டு ஆட்டி வதைக்கிறது. இருப்பிடம், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணம், மருத்துவத்துக்கு தேவைப்படும் செலவு என நாயகன் மணிகண்டன் கதறுகிறான். இதனால் கொஞ்சம் பொறுப்பற்று இருக்கும் நாயகனை நாயகி சிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பிக்கிறாள்.

குழந்தை பிறந்ததும் இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகமாக குழந்தையை விட்டுவிட்டு பெற்றோருடன் செல்கிறார் சிந்து. இதனால் மணிகண்டனே குழந்தையை வளர்க்கும் நிலை உருவாகிறது. அப்பா - மகன் உறவு துவங்குகிறது. இதன்பிறகு என்ன ஆனது, மனைவியுடன் சேர்கிறாரா இல்லை தனியே மகனை வளர்த்து ஆளாக்குகிறாரா என்பதே கதை.

இயக்குநரின் கதை சொல்லல் ஏற்கனவே கணிக்கும்படியாக இருந்தாலும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. கவின் நடிப்பு பிரமாதம். அவர் கதாபாத்திரத்தை சுமந்து செல்லும் விதம் மிக அருமை. அடுத்த சிவகார்த்திகேயனாக ஆனால் சூர்யா, விக்ரம் போல தேர்ந்தெடுத்த கதைக்கு கடுமையாக உழைக்கும் நாயகனாக வளர வாய்ப்பிருக்கிறது. அபர்ணா தாஸ் - கவின் இருவருக்கும் இடையே வரும் காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படம் ஒரு நல்ல ஃபீல்குட் படமாக வந்திருக்கிறது.

ஓடிடி தளம் | Dada ott release platform

கவின், அபர்ணா நடித்துள்ள டாடா திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் ஆகிக் கொண்டிருக்கிறது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 


Tags:    

Similar News