கர்ணா படமும் டிராப்பா? அய்யய்ய எத்தன...!
சூர்யா நடிக்கும் முதல் நேரடி ஹிந்தி படமான கர்ணா டிராப் ஆகிறதா?;
சூர்யா நடிக்க இருந்த ஹிந்தி படமும் டிராப் ஆகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. வணங்கான், வாடிவாசல், புறநானூறு என வரிசையாக பல படங்கள் டிராப் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் அஜித், விஜய்க்கு பிறகு அவர்களது மார்க்கெட்டை கிட்டத்தட்ட தொடும் நிலையில் இருக்கும் நடிகர் சூர்யாதான். தற்போது ஒரு பெரிய வெற்றிப் படம் இல்லாமல் தவித்து வருகிறார்.
சூர்யா தற்போது நடிக்க இருந்த புறநானூறு, திரைப்படமும் சில பிரச்னைகளால் தடைபட்ட நிலையில், ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாகவும், 600 கோடி ரூபாய் பட்ஜெட் எனவும் தகவல் வெளியானது. ஆனால் அந்த படமும் டிராப் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.