ராஜாவை விட மூத்தவரா தீபிகா? உண்மை உடைத்த தீபிகா!
Deepika Venkatachalam Marriage-தனக்கும் தன் கணவருக்கும் இத்தனை வயது வித்தியாசம் இருக்கிறது என்று பலரும் பேசுவதைக் கேட்டு அது குறித்த உண்மையான தகவலை வெளியிட்டுள்ளார் தீபிகா.
Deepika Venkatachalam Marriage--கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து புகழ்பெற்ற தீபிகாவும் ராஜா வெற்றி பிரபும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களைப் பற்றிய டாபிக் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனக்கும் தன் கணவருக்கும் இத்தனை வயது வித்தியாசம் இருக்கிறது என்று பலரும் பேசுவதைக் கேட்டு அது குறித்த உண்மையான தகவலை வெளியிட்டுள்ளார் தீபிகா.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் அதிகமான ரசிகர்களைக் கவர்ந்த கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தீபிகா. இவர் இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியாகவும் இருந்து வருகிறார்.
இதே சீரியலில் பள்ளித் தோழனாக நடிக்கும் ராஜா வெற்றி பிரபு என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் தீபிகா. இவரும் இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருப்பவர்தான். நன்றாக நடனமாடும் இவர் சிம்ரனுடன் சேர்ந்து ஆடிய வீடியோ மிகப் பெரிய அளவில் வைரலாகியது.
காதலித்தாலும் பெற்றோர் விருப்பத்துக்கு பிறகே திருமணம் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் திருமணத்துக்கு பிறகு இன்ஸ்டாகிராம் லைவில் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள்.
அப்போது தீபிகாவை விட ராஜா வெற்றி பிரபு வயதில் குறைந்தவரா என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர். சிலர் ராஜா 1998ல் பிறந்தவர் என்றும் தீபிகா 1995ம் ஆண்டில் பிறந்தவர் என்றும் பதிவிட்டு வருகின்றனர் என தெரிவித்த தீபிகா, தங்கள் உண்மையான வயதைக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் தீபிகா 1997ல் பிறந்தவராம். ராஜா வெற்றி பிரபு 1996ல் பிறந்திருக்குறார். இருவருக்கும் 10 மாதங்கள் வயது வித்தியாசமாக இருக்கிறதாம். ஆனால் சிலர் என்னை அக்கா மாதிரி இருக்கிறார் என்று கூறும்போது சிலசமயம் கடுப்பாகவும் சில சமயம் சிரிப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2