உங்களுக்கு 32 - எனக்கு 50, விரைவில் கணக்கை அதிகரிக்க வேண்டும் - கமல்ஹாசனிடம் நகைச்சுவை செய்த ஜாக்கிசான்

jackie chan latest news - இதுவரை 50 முறை பிராக்சர் ஆகியுள்ளது; விரைவில் கணக்கை அதிகரிக்க வேண்டும் என, ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான், உலகநாயகன் கமல்ஹாசனிடம் நகைச்சுவையாக கூறிய தகவல், தற்போது வைரலாகி வருகிறது,;

Update: 2022-09-02 08:13 GMT

 jackie chan news -  தனது நண்பரான ஜாக்கிசான் நகைச்சுவையாக பேசியது குறித்து, நடிகர் கமல் கூறியது வைரலாகி வருகிறது. 

 jackie chan news, jackie chan latest news- உலக அளவில் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் நடிகர் என்றால் அது ஜாக்கி சான்தான்.

காரணம், சண்டைக் காட்சிகளில் கைதேர்ந்த அவர், அதனை நகைச்சுவையோடு கலந்து கொடுப்பதில் வல்லவர். அதனால் குழந்தைகளாக இருக்கும்போதே, அனைவரது மனதிலும் பதிந்து விடுவார்.


ஒருமுறை நடிகர் கமல்ஹாசனும், நடிகர் ஜாக்கிசானும் சந்தித்துக் கொண்டபோது, அவர்கள் பேசிக் கொண்டதை கமல்ஹாசன் ஒரு நிகழ்வில் பகிர்ந்துள்ளார்.

தசாவதாரம்

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'தசாவதாரம்'. ரவிச்சந்திரன் ஆரம்ப காலக்கட்டத்தில், ஜாக்கிசான் படங்களை தமிழில் 'டப்' செய்து, அதை தமிழகத்தில் விநியோகித்தவர். அந்த வகையில் ஜாக்கி சான் வட்டாரத்தில் இருப்பவர்களுடன், ரவிச்சந்திரன் நட்பு பாராட்டியவர். எனவே மிகப் பெரிய பொருட்செலவில் உருவான 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அவரை கலந்து கொள்ளச் செய்தார்.


ஜாக்கி சான் எளிமை

அந்த இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, 'நாம் இருவரும் சேர்ந்து நடிக்கலாம்' என்று கமல்ஹாசனிடம் ஜாக்கி சான் கூறியிருப்பார். மேடைக்காக அவர் அப்படி கூறியிருந்தாலும் இருவரும், எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என்று ரசிகர்கள் இன்னமும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அந்த மேடையில் இசை வெளியிடப்பட்ட போது அந்த போஸ்டர் கவரை அனைவரும் கிழித்து கீழே எறிந்தார்கள். பின்னர் அந்த போஸ்டரை ஓரமாக கமல்ஹாசன் வைக்கச் செல்ல, அமிதாப்பச்சன், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களும் மேடையில் நின்று கொண்டிருக்க ஜாக்கிசான் கீழே விழுந்த போஸ்டரை எடுத்துக்கொண்டு ஓரமாக வைக்கச் சென்றார். அதனை கவனித்த ரசிகர்களும், அங்கிருந்தவர்களும் ஜாக்கிசானின் எளிமையை கண்டு வியந்தனர்.

ஜாக்கி கமல் உரையாடல்

அந்த சமயத்தில் இருவரும் பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தபோது, 'இதுவரை உங்களுக்கு எத்தனை முறை பிராக்சர் ஆகியுள்ளது,' என்று கமல்ஹாசன் கேட்க, 'நீங்கள் சண்டை போடுவீர்களா' என்று ஜாக்கிசான் கேட்டாராம். 'நானும், என்னுடைய படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன்,' என்று சொல்ல, 'இதுவரை உங்களுக்கு எத்தனை முறை பிராக்சர் ஆகியிருக்கிறது, என்று ஜாக்கி '32 முறை' என்று கமல் சொல்ல, சிறிது நேரம் யோசித்த ஜாக்கிசான், 'எனக்கு வெறும் 50 முறைதான் ஆகியுள்ளது. கூடிய விரைவில் கணக்கை அதிகரிக்க வேண்டும்,' என்று நகைச்சுவையாக சொன்னதாக, கமல் சமீபத்திய நிகழ்வில் கூறியுள்ளார்.


இந்தியச் சந்தை

இந்தியாவைச் சேர்ந்த மல்லிகா ஷெராவத்துடன் நடித்துள்ள ஜாக்கி சான், விரைவில் இந்திய நடிகர்களுடனும் நடிக்க வேண்டும் அதுவும் அவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் தமிழ் நாட்டு நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பது இங்குள்ள ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

Tags:    

Similar News