வரமுடியாது... ரஜினி சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் கமல்?
லைகா சுபாஷ்கரன், ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், டோலிவுட் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்று தற்போது கூறப்படுகிறது.;
வரும் ஜூன் 1ம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிர்ச்சிகரமான ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
கமல்ஹாசன் பட நிகழ்ச்சிக்கு வரமுடியாது என ரஜினிகாந்த் கூறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ரஜினிகாந்த் வரமுடியாது என்று கூறியதாகவும் இதனால் கமல்ஹாசன் வருத்தமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. ஆனால் இதில் உண்மை இல்லை எனவும், நடந்ததே வேறு எனவும் ரஜினிக்கு நெருங்கிய வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமாகும்போதே மிகப் பெரிய ஸ்டாராக இருந்த கமல்ஹாசன், இன்று வரை தனது பெருமையைத் தக்கவைத்திருக்கிறார். தனது நண்பரான ரஜினிகாந்துக்கு சினிமா வாய்ப்புகளை வாங்கி கொடுத்தும் அவர் கஷ்டப்படும் தருணங்களில் உதவியும் அவரது படங்களுக்கு உதவி செய்தும் இன்று வரை நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.
விஸ்வரூபம் படத்துக்கு பிறகு பெரிய அளவில் படங்களை ஒப்பந்தம் செய்யாமலே இருந்தார் கமல்ஹாசன். பின் அரசியலுக்கும் வந்துவிட்டதால் இனி சினிமாவில் தொடரமாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்கு பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் மிகப் பெரிய அளவில் மீண்டும் உயர்ந்தது.
மீண்டும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த் உச்சத்தில் மிளிர்ந்தார்கள். ரஜினியும் தனது ஜெயிலர் மூலம் தான் யார் என்பதை நிரூபித்தார். இப்படி கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இளமை காலத்திலிருந்தே ஒருவர் பட விழாவுக்கு மற்றவர் வருவதும் வாழ்த்துவதாகவும் இருந்து வருகின்றனர். இந்த நட்பில் யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்போது பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் பாரா நேற்று வெளியாகியிருந்தது. அந்த பாடலில் இறுதியில் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி லைகா சுபாஷ்கரன், ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், டோலிவுட் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்று தற்போது கூறப்படுகிறது.
ஜூலை மாதம் வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் மீது இந்தியாவே கண் வைத்திருக்கிறது என்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையே பிரம்மாண்டமாக நடத்தி அனைத்து மொழி பிரபலங்களையும் அழைத்து நடத்த திட்டமிட்டிருந்தபோது ரஜினிகாந்த் கலந்து கொள்ளமாட்டார் என கூறப்படுகிறது. அதுவும் ரஜினியே இந்த விழாவில் தான் கலந்துகொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம்.
கமல்ஹாசன் பட விழாவில் வந்து பேசினால் தன் இமேஜ் பாதிக்கும் என ரஜினி நினைத்திருப்பார் என்கிறார்கள். ஆனால் ஆரம்பம் முதலே இருவரும் இப்படி நினைத்தது இல்லை. பக்குவப்பட்டு முதுமை நெருங்கிய பிறகா இப்படி யோசிப்பார்கள் என்கின்றனர் சிலர். ஜூன் 1ம் தேதி பிரம்மாண்டமாக நடக்கும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் யார் யார் கலந்து கொள்கிறார்கள்..? ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.