ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘அடியே’ படத்தின் ஆடியோ ட்ரைலர் வெளியீடு

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘அடியே’ படத்தின் ஆடியோ ட்ரைலர் சென்னையில் வெளியிடப்பட்டது.

Update: 2023-08-09 12:08 GMT

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பல படங்களிலும் நடித்து உள்ளார்.தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர் ரசிகைகள் பட்டாளத்தை தனக்குள் உருவாக்கி வைத்து உள்ளார்.


Gv Prakash Kumar Speech at Adiyae Audio Launch, gv prakash latest newsஜி.வி. பிரகாஷ் கதாயகனாக நடித்து வரும் படம் அடியே. இந்த படத்தின் அபிசியல் ட்ரைலர்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் தான் அடியே படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


Gv Prakash Kumar Speech at Adiyae Audio Launch, gv prakash latest newsமாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


Gv Prakash Kumar Speech at Adiyae Audio Launch, gv prakash latest newsஇந்த படத்தின் ஆடியோ ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜிவிபிரகாஷ் ரசிகர்கள் மன்றம் சார்பில் அவரது தலைமை ரசிகர் மன்றத்தினர் அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து விரைவில் அவரது நூறாவது ஆல்பம் வெளியீட்டு விழா நடைபெற வேண்டும் என வாழ்த்தினார்கள்.

வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது:-

Gv Prakash Kumar Speech at Adiyae Audio Launch, gv prakash latest newsஇது ஒரு வித்தியாசமான லவ் ஸ்டோரி படம். இது ஒரு சவாலான படமும் கூட. சென்னையில் பனிவிழுந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் இந்த படம் உருவாகி வருகிறது.  ஆனால் இப்போது காற்று அடிக்கிறது. இந்த படத்தில் எனக்கு நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

கௌதம் சார் கூட ஒர்க் பண்ணும் போது இங்கிலீஷ் படத்தில் ஒர்க் பண்ணுவது போல் இருக்கும். அதை போல் ராஜா சார் உள்பட நான் எல்லார் கூடயும் ஒர்க் பண்ணி இருக்கேன். ஆனா இந்த படத்துல ஒர்க் பண்ணுவது எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது. இந்த படத்திற்கு நிச்சயம் ஒரு எதிர்காலம் உண்டு. இந்த படத்தில் கௌரி ரொம்ப நல்லா பர்பாம் பண்ணி இருக்காங்க. இவ்வளவு சீக்கிரம் ஒர்க் பண்ணுவது ரொம்ப கஷ்டம். கோகுலுக்கு நிச்சயம் ஒரு எதிர்காலம் உண்டு.

Gv Prakash Kumar Speech at Adiyae Audio Launch, gv prakash latest newsஅடியே படத்தின் ஆல்பம் ஒரு பெஸ்ட் ஆல்பம். இந்த படத்தின் ஆடியோக்களை நான் இங்கேதான் கேட்டேன் மிகவும் நன்றாக இருக்கிறது. எடிட்டர் உதவி இயக்குனர்கள் மிகவும் நன்றாக வேலை செய்திருக்கிறார்கள். எல்லாம் மிகவும் இளைஞர்கள். இப்படி ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் டீம் கிடைத்திருப்பது மிகவும் வரப்பிரசாதம். அடியே நிச்சயமாக ஒரு ரெகுலர் படம் கிடையாது. வித்தியாசமான படம். நாங்கள் இதுக்காக ஒரு முயற்சி எடுத்திருக்கிறோம். 

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News