GOAT UPDATE இது ஒன்னு மட்டும்தான்... மத்ததெல்லாம் முடிஞ்சிது!

நடிகர் ஜெயராம் நடிக்கும் காட்சிகளுக்கான பேட்ச் ஒர்க் பணிகள் பாண்டிச்சேரியில் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன;

Update: 2024-05-27 09:15 GMT

தி கோட் திரைப்படத்துக்காக டப்பிங் பணிகள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் அதுவும் 50 சதவிகிதம் அளவுக்குதான் பாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தனது எஞ்சியுள்ள டப்பிங் பணிகளையும் விரைவில் செய்து முடிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘GOAT’ திரைப்படம், தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மீனாட்சி சௌத்ரி, ஸ்னேஹா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், இயற்கை எய்திய நடிகர் விஜயகாந்த் அவர்களை செயற்கை நுண்ணறிவு மூலம் சேர்க்கப்படுவார்கள் என்ற செய்திகள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய் (இரட்டை வேடங்களில் நடிக்க, அவருடன்) பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மீனாட்சி சௌத்ரி, சிநேகா, மோகன் உள்ளிட்ட பெரும் பட்டாளமே நடித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் படம் பிரமாதமாக வந்துகொண்டிருக்கிறதாம். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்வது என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

தற்போது நடிகர் ஜெயராம் நடிக்கும் காட்சிகளுக்கான பேட்ச் ஒர்க் பணிகள் பாண்டிச்சேரியில் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து விஜய் பங்கேற்கும் பேட்ச் ஒர்க் காட்சிகளையும் எடுக்க இருக்கிறது படக்குழு. இதனிடையே அமெரிக்காவில் சிஜி வேலைகளும் வேக வேகமாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், அடுத்த சிங்கிளுக்கான அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த முறை ஒரு மெலோடி பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. டைம் டிராவல் கதையில் இந்த படம் உருவாவதாக கூறப்படும் நிலையில், இந்த படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

Tags:    

Similar News