எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேல ராமமூர்த்தியின் சம்பளம் எவ்ளோ தெரியுமா?
எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேல ராமமூர்த்தியின் சம்பளம் குறித்த தகவல்கள் பரவி வருகின்றன.;
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வரும் வேல ராமமூர்த்தியின் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இதே கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாரிமுத்துவை விட அதிக சம்பளம் பெறுவதும் தெரியவந்துள்ளது.
ஆணாதிக்கம், பெண் அடிமை செய்யும் குணசேகரன் அவரது தம்பிகளிடமிருந்து எதிர்நீச்சல் அடித்து மேலே வர அவரது குடும்ப பெண்கள் நடத்தும் போராட்டமே எதிர்நீச்சல் சீரியலின் கரு. ஒவ்வொரு பெண்களும் இப்படி முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பல காட்சிகளுடன் நல்ல கதையம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக இருந்தாலும், தனக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தவர் மாரிமுத்து.
உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த அவரை தமிழக மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள் என்கிற அளவுக்கு அவர் தனது நடிப்பை ஆழ பதித்திருந்தார். சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் கனிகா, மதுமிதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். மாரிமுத்து நடித்து வந்த குணசேகரன் கதாபாத்திரத்தில் தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். கதை மீண்டும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சலில் இப்போது தேர்தல் விஷயங்கள் பரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. எஸ்கேஆர் மனைவி சாருபாலாவுக்கு எதிராக தனது மனைவியை குணசேகரன் நிற்க வைக்க, இப்போது அதுவே பிரச்சனையாக அவருக்கு வந்து சேர்ந்துள்ளது.
சாருபாலா தேர்தலில் இருந்து பின்வாங்கிவிட்டாலும், குணசேகரனின் மனைவி ஈஸ்வரி வாபஸ் வாங்க மாட்டேன் என்று கூறிவிட்டு அவர் தேர்தலில் நிற்க முடிவு எடுக்கிறார். ஊர் உலகில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு பொங்கும் ஈஸ்வரி, தான் நிச்சயமாக இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்து, தேர்தலில் வாபஸ் பெற மாட்டேன் என சண்டை போட, கடும் கோபத்தில் இருக்கிறார் குணசேகரன்.
இதனையடுத்து, குணசேகரனுக்கு எதிராக ஈஸ்வரி உட்கார்ந்து பேட்டி கொடுக்க, இதனால் கோபமான குணசேகரன் அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறார். இப்படி ஒரு பிரளயம் எதிர்நீச்சலில் உருவாக இருக்கிறது.
வேல ராமமூர்த்தியின் சம்பளம்
இந்த கதையில் அதிக புகழ் பெற்ற கதாபாத்திரம் என்றால் அது இயக்குநர் மாரிமுத்து ஏற்று நடித்த குணசேகரன் வேடம் தான். காட்ட வேண்டிய நேரத்தில் வில்லத்தனத்தையும், தேவைப்படும் நேரத்தில் காமெடியையும் அள்ளி வீசி அழகாக நடிப்பை கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். துரதிஷ்டவசமாக அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவருக்கு பதில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வேல ராமமூர்த்தி மாதத்திற்கு ரூ. 10ல் இருந்து ரூ. 15 லட்சம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இது தமிழ் சீரியல்களில் நடிகர் ஒருவருக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளமாகும். மேலும் ஒரு மாதத்தில் 15 நாட்கள் வரை வேல ராமமூர்த்தி படப்படிப்பிடிப்புகளில் பங்கு பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.
சினிமாவிலும் நடித்து வருவதால் அவர் கால்ஷீட் மிகவும் டைட்டாக இருப்பதாக கூறப்படுகிறது.
வேல ராமமூர்த்தி இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வருகிறார் என்பதால் அவருக்கு இந்த சம்பளம் கிடைப்பது நியாயமானது என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.