அழகான மனைவியுடன் நடிகர் சதீஷ்; 'லைக்'குகளை அள்ளும் புகைப்படங்கள் வைரல்

Actor Sathish Wife - காமெடி நடிகர் சதீஷ், தனது மனைவி சிந்துவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;

Update: 2022-12-16 09:54 GMT

comedian sathish wife- காமெடி நடிகர் சதீஷ், தனது மனைவி சிந்துவுடன் உள்ள புகைப்படம்.

Actor Sathish Wife - தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை விட தற்போது காமெடியனாக நடிக்கும் நடிகர்களுக்கு போட்டி அதிகமாகி விட்டது என்றே கூறலாம். வெள்ளித்திரையில் புதிது புதிதாக காமெடி நடிகர்கள் உருவாகி வருகிறார்கள். ஆனால், சில நடிகர்களால் தான் தாக்கு பிடிக்க முடிகிறது. 


விஜய் டிவியில் 'அது இது எது' நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், பாண்டியராஜன் இயக்கத்தில் 'மெரினா' படத்தில் அறிமுகமாகி, இப்போது பல கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நட்சத்திரமாக வெற்றி பெற்றிருக்கிறார். இந்த படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் சதீஷ். அதே போல், விஜய் டிவியில் இருந்து வந்த ரோபோ சங்கர், காமெடி நடிகராக வெற்றி பெற்று, பல படங்களில் நடித்து வருகிறார். எனினும், ஒரு சிலர் மட்டுமே, இப்படி வெற்றி பெற முடிகிறது. அனைவருமே ரசிகர்களிடையே பிரபலமாவது இல்லை. அந்தந்த சீசன் போல, சில காமெடி நடிகர்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போய் விடுகின்றனர்.


ஆனால், ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துக் கொண்டவர் காமெடி நடிகர் சதீஷ் இவர் நடிக்கும் காமெடி படங்களுக்கு எப்போதுமே அவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள். அதிலும் குறிப்பாக இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விட்டார் என்றால் அந்த திரைப்படத்தில் காமெடிக்கும் பஞ்சமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சதீஷை பொருத்தவரை, இயல்பான முகபாவனையில் காமெடி டயலாக்குகளை பேசுவார். அதுவும், சிவகார்த்திகேயன் - சதீஷ் காமெடி காம்பினேஷன் ரசிகர்களுக்கு தித்திப்பாக அமைந்தது. உண்மையான நண்பர்களாக இருவரும் இருப்பதால், சினிமாவில் நடிக்கும்போது, அந்த தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அவர்களது நகைச்சுவை காட்சிகள் அமைந்து விடுவதும் குறிப்பிடத்தக்கது.  

சிவகார்த்திகேயனும், சதீஷூம் நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பே, இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சதீஷ் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வந்தார். இந்த ஆண்டு மட்டுமே 'நாய் சேகர்', 'ஹாஸ்டல்' போன்ற படங்கள் வெளியாகின. அடுத்தடுத்தும் நிறைய படங்கள் அவரது நடிப்பில் வெளியாக உள்ளது.


நீண்ட நாட்களாக, திருமணம் ஆகாமல் இருந்த சதீஷ்க்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி திருமணமானது. 'சிக்சர்' படத்தின் இயக்குநரான சாச்சியின் தங்கையான சிந்துவிற்கு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில்,  தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சதீஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதைப்பார்த்த ரசிகர்கள் சதீஷ் - சிந்துவை 'அழகான ஜோடி' என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News