சந்திரமுகி -2 ரெடியாகி வருகிறது..! வடிவேலுவுக்கு அதே முருகேசன் கேரக்டர்..!?

chandramukhi 2 latest news-சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது மைசூர் பகுதியில் நடந்துவருகிறது.

Update: 2022-08-11 09:32 GMT

chandramukhi 2 latest news-நடிகர் வடிவேலு.

chandramukhi 2 latest news-2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் சக்கைபோடு போட்டது. இந்த படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் லாரன்ஸ்,வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15ம் தேதி மைசூரில் தொடங்கி நடந்துவருகிறது.

முதல் பாகத்தின் வெற்றியில் வடிவேலுவின் முருகேசன் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ரஜினியோடு சேர்ந்து அவர் செய்த அலப்பறைகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் முருகேசன் கதாபாத்திரம் பேசப்படும் பாத்திரமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது உருவாகி வரும் 2ம் பாகத்திலும் அவர் முருகேசன் என்ற அதே கேரக்டரில்தான் நடிப்பதாக சொல்லப்படுகிறது. 2ம் பாகம்,  முதல் பாகத்துக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத வேறு கதை என்றாலும் முதல் பாக முருகேசன் கதாபாத்திரம் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக  கூறுகிறார்கள்.

Tags:    

Similar News