பவர் மேன் பூமர் அங்கிள் காமெடியோடு திகில் கலந்த படம் பாருங்க....
boomer uncle movie trailer tamil ,boomer uncle release date சினிமான்னா நமக்கு நேரம் போறதே தெரியக்கூடாது. சிரிச்சு சிரிச்சு நமக்கே வயித்துவலி வந்துவிடும் போங்க. அந்த வகையில் பூமர் அங்கிளும் அந்த ரகம்தான்...;
ஜனரஞ்சக காமெடி மற்றும் திகில் கலந்த திரைப்படம் பூமர் அங்கிள் ஓவியா, யோகிபாபு(கோப்பு படம்)
boomer uncle movie trailer tamil ,boomer uncle release date
தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை உள்ளே நுழையும்போது காமெடி ஆக்டராக களம் இறங்குகின்றனர். பின்னர் முக்கிய ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கின்றனர். அந்த வாய்சை வைத்து பின்னர் தயாரிப்பாளர்கள் இவர்களை வைத்து ஒரு தனியாக படம் பண்ணினால் என்ன? இவர்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனரே? என்று ஒரு ஸ்மால் பட்ஜெட்டில் படம் எடுத்துவிடுகின்றனர். அந்த வகையில் காமெடி வைகைப் புயல் வடிவேலுவை சொல்லலாம். தற்போது கூட அவருடைய படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பெரும் கலக்கு கலக்கி வருகிறது.அந்த வகையில் யோகிபாபுவும் அடக்கம்.
boomer uncle movie trailer tamil ,boomer uncle release date
யோகிபாபு, ஓவியா நடித்துள்ள இப்படம் பூமர் அங்கிள் திரைப்படத்தின் பிரதான போஸ்டர்... (கோப்பு படம்)
boomer uncle movie trailer tamil ,boomer uncle release date
ரஜினியோடு நடித்த யோகிபாபு மெயின் கேரக்டராக நடிக்கும் இந்த படம் பூமர் அங்கிள். அவரோடு விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் தங்கதுரை, எம்.எஸ்.பாஸ்கர்,பாலாஉள்ளிட்டோரும், மற்றும் குணச்சித்திர நடிகரும் காமெடியனுமான ரோபோ சங்கரும் நடித்துள்ளார் பூமர் அங்கிளாக. தியேட்டருக்கு போய் பார்த்தால் நேரம்போவதே தெரியாது போல அந்த வகையில் ட்ரெய்லரில் படம் சற்று விறு விறுப்பாகத்தான் செல்கிறது. முன்னணி நடிகர்கள் நடித்த படங்களையே பார்த்த நம் கண்களுக்கு கூட்டு காமெடி கலவையாக களம் இறங்கியதுதான் பூமர் அங்கிள். போய்த்தான் பாருங்க... வயிறு நிறைய சிரிப்பீங்க.... வாய்விட்டு சிரிச்சா...நோய் வராதுங்கோ... போய் பாருங்க... டிரெய்லரே இந்த கலக்கு கலக்குகிறது என்றால் படம் எப்படி இருக்கும்? என ஆர்வத்தினைத்துாண்டும் வகையில் இந்த டிரெய்லர் உள்ளது.
boomer uncle movie trailer tamil ,boomer uncle release date
திகிலுாட்டும் படம் போல் உள்ளதால் கையில் துப்பாக்கியோடு யோகிபாபு.பூமர் அங்கிளாக ரோபோ சங்கர் (கோப்புபடம்)
boomer uncle movie trailer tamil ,boomer uncle release date
தமிழ்த் திரையில் தற்போதைய பிசிமேனாக திகழும் காமெடி நடிகர் யோகிபாபு மற்றும் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா ஆகியோர் நடிக்கும் படம்தான் பூமர் அங்கிள்.இந்த படத்தில் காமெடி ஆக்டர் யோகிபாபு நேசமணி கேரக்டரில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இப்படத்திற்கு கான்ட்ராக்டர் நேசமணி என பெயரிடப்பட்டது. பின்னர் தான்இது பூமர் அங்கிளாக மாறியுள்ளது இந்த படத்தில் திகிலுாட்டும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படமே த்ரில்லிங்காகவே போகிறது.... திடீர் திடீரென பூமர் அங்கிளின் அதிரடி சாகஸங்கள் வேறு.... திடீர்னு பேய் படத்தில் வருவது போன்ற காட்சிகளால் திக். திக்... திக்... என்றுதான் நம் மனசு அடித்துக்கொள்கிறது... அப்புறம் பார்த்தால் அதுவே காமெடியாகிவிடுகிறது... சிறு குழந்தைகளை இப்படம் நிச்சயம் கவரும்...
தமிழ்த்திரையுலகில் காமெடி படம் என்றாலே கலக்கல்தான் என்று சொல்லும் வகையில் இப்படத்தின் டிரெய்லர் காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. அதோடு யோகிபாபுவோடு நடிகை ஓவியா நடித்துள்ளதால் அது ஒரு தனிப்பட்ட சிறப்பம்சத்தினைத்தருவதாக அமைந்துள்ளது. நடிகை வாணி போஜன் நடித்துள்ளதோடு அவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரே பெரும் கலக்கலாக அமைந்துள்ளது இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு என்று சொன்னாலும் டிரெய்லரே சோஷியல் மீடியாவில் கலக்கலான இடத்தினைப் பெற்றுள்ளது.
boomer uncle movie trailer tamil ,boomer uncle release date
காமெடிக்கு பஞ்சமே இல்லை போங்க.... ஏஜென்ட் தாவூத் கேரக்டர் போல் பூமர் ஸ்குவாட் பேட்ச்சாம் (கோப்பு படம்)
boomer uncle movie trailer tamil ,boomer uncle release date
இந்த படத்தினை அன்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கான இசையினை தர்ம பிரகாஷ் கேட்கும்படி அமைத்துள்ளார். கதைவசனம் சுரேஷ்தண்டபாணி. இப்படத்தின் இயக்குனராக எம்எஸ் ஸ்வதீஷ் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் அன்பு கார்த்திக்.
இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது ஏதோ மாயாஜாலப்படம் போலவும் திகில் படம் போலவும் உள்ளதால் இது நம் தமிழக ரசிகர்களுக்கு ஒரு ஜனரஞ்சக படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ரோபோசங்கரின் மாஸ் கேரக்டர்தான்இப்படத்திற்கு தலைப்பே. அவர்தான் பூமர் அங்கிள் போல் நடித்துள்ளார். அவரை சரிக்கட்ட ஒரு காமெடிப்பட்டாளமே அந்த அரண்மனை போன்ற வீட்டில் எதிர்க்கிறது. அதுவும் நடிகை ஓவியாவே எதிர்க்கிறார் , மல்லுக்கட்டுகிறார் என்றால் பார்த்துக்கோங்களேன்.
boomer uncle movie trailer tamil ,boomer uncle release date
ஏஜென்ட் வல்லரசு கேரக்டரில் காமெடி நடிகர் தங்கதுரை இவரும் பூமர் ஸ்குவாடுங்களாம்... (கோப்பு படம்)
boomer uncle movie trailer tamil ,boomer uncle release date
படம் முழுக்க காமெடி மற்றும் கதையும் இருந்தால் நம் தமிழகத்தினைப் பொறுத்தவரை ஓடுவதற்கு சான்ஸ்அதிகம். இப்போதெல்லாம் ரிலீசாகும் தமிழ்ப்படங்கள் 100 நாள் ஓடவேண்டும் என யாருமே எதிர்பார்ப்பதில்லை. போட்ட காசை எடுக்க முடியுமா? என்றே எதிர்நோக்குகின்றனர். வசூல் களை கட்டினால் போதும் கல்லா நிரம்பிவிடும் என்ற பழமொழியே இக்கால தமிழ்த்திரையுலக்கு தேவையான ஒன்றாகிவிட்டது.
அந்த வகையில் இந்த பூமர் அங்கிள் ஒரு கலக்கு கலக்கும். எப்ப பார்த்தாலும் சண்டை பாட்டு என பார்த்த நம் கண்களுக்கு ஒரு ஜனரஞ்சக காமெடி படம் போல் இது விருந்தாக அமையலாம் . டிசம்பர் மாதத்தில் இப்படம் வெள்ளித்திரைக்கு வரலாம் என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். படத்தயாரிப்பு குழுவும் அடுத்த மாதம் ரிலீஸ் செய்துவிடலாம் என திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.