நயன்தாராவை காப்பி அடித்தாரா அமலாபால்? அடடே.. இப்படி ஒரு பெயரா?

சமீபத்தில் அமலா பால் தாயானார் என்ற செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.;

Update: 2024-06-19 13:00 GMT

அமலா பால் - கோலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். 2009-ல் வெளியான "நீலத்தாமரா" என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், அடுத்த ஆண்டே "மைனா" என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார்.

சமீபத்தில் அமலா பால் தாயானார் என்ற செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரும் அவரது கணவர் ஜெகத் தேசாயும் தங்களது மகனுக்கு "இலை" என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த வித்தியாசமான பெயர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பதிவில் மகிழ்ச்சி செய்தி

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை உடையில் கையில் குழந்தையுடன் வீட்டிற்குள் நுழையும் வீடியோவை அமலா பால் பகிர்ந்துள்ளார். "இது ஒரு ஆண் குழந்தை!! எங்கள் சிறிய அதிசயத்தை சந்திக்கவும், 'இலை' 11.06.2024 அன்று பிறந்தார்." என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பெயரின் அர்த்தம் என்ன?

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற அதே வேளையில், "இலை" என்ற பெயர் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. "இலை என்றால் என்ன அர்த்தம்?", "இலை என்றால் தமிழில் இலையா?" என்று பலர் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சமீபத்திய தகவல்களின்படி, இலை என்றால் இலை என்றுதான் அர்த்தம்.

நடிகை இந்த பெயரை தேர்வு செய்ய என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஆனால் அமலா பால் தனது குழந்தைக்கு இயற்கையோடு தொடர்புடைய இந்த அழகான பெயரை தேர்வு செய்திருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

நயன்தாராவைப் பார்த்து...?

நயன்தாரா தனது மகன்களுக்கு உயிர், உலகம் என தமிழில் பெயர் வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அமலாபாலும் இலை என்று தமிழில் பெயர் வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேச்சு எழ, அவரைப் பார்த்து இவர் காப்பி அடித்திருப்பதாக பேசத் தொடங்கிவிட்டனர்.

அதேநேரம் இந்த இலை தமிழ் இலை அல்ல அது இலாய். ஹீப்ரு மொழியில் இதற்கு உலகம் என்று பொருள் என்று கூறுகின்றனர். அப்படிப்பார்த்தாலும் எங்க நயன்தாராவை பார்த்துதானே உலகம் பொருள்பட பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கிளம்பி வருகிறார்கள்.

தனித்துவமான பெயர் தேர்வுகள்

திரையுலக பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான மற்றும் அர்த்தமுள்ள பெயர்களை தேர்வு செய்வது புதிதல்ல. சமீபத்தில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது இரட்டை குழந்தைகளுக்கு "உயிர்" மற்றும் "உலகம்" என்று பெயரிட்டனர். இதுபோன்ற வித்தியாசமான பெயர்கள் ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரிப்பதுடன், அவர்களது படைப்பாற்றலையும் வெளிப்படுத்துகிறது.

இரண்டாம் திருமணம்

2014-ல் பிரபல இயக்குநர் ஏ.எல். விஜய்யை மணந்த அமலா பால், 2017-ல் அவரை விவாகரத்து செய்தார். தனது நடிப்பு வாழ்க்கையில் குடும்பத்தினரின் தலையீடு காரணமாக இந்த முடிவை எடுத்தார் என்று அவர் கூறினார். 2023-ல் தனது நண்பரும் தொழிலதிபருமான ஜெகத் தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த ஆண்டு ஜனவரியில், தனது கர்ப்பத்தை சமூக வலைதளங்களில் அறிவித்தார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தனது திரைப்பயணத்தில் பல சவால்களை எதிர்கொண்ட அமலா பால், தற்போது தாயாகி புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவரது மகன் "இலை"-யின் புகைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தனது குழந்தையுடன் அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் விரைவில் சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பதில் சந்தேகமில்லை.

Tags:    

Similar News