அர்ஜூன் மகளுக்கு டும் டும் டும்! மாப்பிள்ளை நடிகர்தானாம்!
தமிழ் சினிமாவில் ஜெய்ஹிந்த், குருதிப்புனல், ஏழுமலை, வானவில், மங்காத்தா என பல படங்களில் நடித்து பெரிய புகழ் பெற்றவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இவர் தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார்.;
தமிழ் சினிமாவில் ஜெய்ஹிந்த், குருதிப்புனல், ஏழுமலை, வானவில், மங்காத்தா என பல படங்களில் நடித்து பெரிய புகழ் பெற்றவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இவர் தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா எனும் மகள் இருக்கிறார். அவரும் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
கடந்த 2013ம் ஆண்டு விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் நாயகியாக நடித்தது அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாதான். அதன்பிறகு இவர் சினிமாவில் பெரிய கவனம் எதுவும் செலுத்தவில்லை. அந்த படத்தில் விஷால் ஜோடியாக பெரிய கவர்ச்சி எதுவும் இல்லாமல் டீசண்டாகவே நடித்திருப்பார் ஐஸ்வர்யா. ஆனால் அவருக்கு ஹீரோயினுக்கான உடல் மொழி இல்லை என்று பல விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாப்பிள்ளை யார் தெரியுமா ? நம்ம தம்பி ராமையாவின் மகள் உமாபதிதானாம். நீண்ட நாட்களாக காதலித்து வரும் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்களாம்.
ஐஸ்வர்யா தற்போது உடல் எடை கூடி ஹீரோயினுக்கான தோற்றத்துடன் இருக்கிறார். இவரைத் தேடி சில படவாய்ப்புகள் வந்தாலும் தனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறி வருகிறாராம்.
காமெடி நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் தம்பி ராமையாவின் மகன் பெயர் உமாபதி. இவருக்கு நடிகை யாஷிகாவுக்கும் காதல் என தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து உமாபதி தரப்பிலும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் பத்திரிகைகள் இருவரையும் இணைத்து எழுதி வந்தன.
அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் திரில்லர் நிகழ்ச்சியில் உமா பதி பங்கேற்று இருந்தார். அதன் மூலம் இருவரது குடும்பமும் நட்பாகி இருக்கிறது என்று கூறப்படுகிறது.