நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Asin Actress - நடிகை அசினின் கணவர் ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2022-09-06 05:56 GMT

நடிகை அசின்- கணவர் ராகுல் ஷர்மா

Asin Actress  - நடிகை அசின், கடந்த 2001ம் ஆண்டு சத்யன் அந்திக்காடின் மலையாளத் திரைப்படமான நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா படத்தில் தனது15வது வயதில் ஒரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார்.

பின்னர் ஓராண்டு காலம் படிப்பில் கவனத்தைச் செலுத்திய அசின், அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பினார்.

அவரது முதல் தெலுங்கு மொழிப் படமான இதில் ரவி தேஜாவுக்கு இணையாக, தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார், இப்படம் இவருக்கு சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது அதே ஆண்டில், சிவமணி, என்ற தனது இரண்டாவது தெலுங்குத் திரைப்படத்தில் நாகார்ஜூனாவுக்கு க்கு இணையாக இவர் நடித்ததற்கு சந்தோசம் சிறந்த நடிகை விருது|சந்தோசம் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.

rahul sharma micromax net worth

இதனையடுத்து இவர் நடித்த, லட்சுமி நரசிம்மா மற்றும் கர்சனா ஆகிய இரண்டு தெலுங்கு திரைப்படங்களும், வெற்றிப் படங்களாக அமைந்ததோடு தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இவரது இடத்தை வலுப்படுத்தியது.

தமிழ் மொழியில் அசினின் முதல் படம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, இதில் இவர் ஜெயம் ரவிக்கு இணையாக நடித்தார். இது அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி படத்தின் தழுவல் திரைப்படமாகும்.

இவர் மலையாளம் அவரது தாய் மொழி, அதனை தாண்டி தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி, பிரன்ச், இத்தாலியன், மராத்தி, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் என பல மொழிகளில் பேசக் கூடியவர். கடைசியாக இவரது நடிப்பில் ஆல் ஈஸ் வெல் என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்திற்குப்பின், நடிகை அசின் மைக்ரோ மேக்ஸ் இணை நிறுவனரான ராகுல் ஷர்மாவை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

பெரிய தொழிலில் ஈடுபட்டுள்ள நடிகை அசினின் கணவர் ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 1.400 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News