திருச்சி பெல் பொறியாளர்: புதிய டி.ஜி.பி. சங்கர் ஜிவாலின் கடந்த கால வரலாறு

திருச்சி பெல் பொறியாளர்: புதிய டி.ஜி.பி. சங்கர் ஜிவாலின் கடந்த கால வரலாறு
X

புதிய டி.ஜி.பி. சங்கர் ஜிவால்.

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக பதவி ஏற்றுள்ள சங்கர் ஜிவால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி பெல்லில் பெல்லில் பணியாற்றி உள்ளார்.

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக பதவி ஏற்றுள்ள சங்கர் ஜிவால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி பெல்லில் பணியாற்றியவர் என்ற தகவல் கிடைத்து உள்ளது.

தமிழகத்தின் டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திர பாபு இன்றுடன் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சங்கர் ஜிவால் தமிழகத்தின் 31வது டி.ஜி.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவரிடம் ஓய்வு பெறும் டி.ஜி.பி .சைலேந்திரபாபு பொறுப்புகளை ஒப்படைத்தார்.

புதிய டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 1990ம் ஆண்டு ஐ.பி.எஸ் .பேட்ஜ் தமிழக கேடர் அதிகாரி ஆவார். பதவி ஏற்றதும் சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காவல் துறை பொதுமக்களின் சிறந்த நண்பனாக செயல்பட பாடுபடுவேன் என்று கூறி உள்ளார்.

சங்கர் ஜிவால் சேலம், மதுரை மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியவர் ஆவார். மேலும் உளவு துறையில் டி.ஐ.ஜி, ஐ.ஜி. ஆகிய பதவிகளிலும் பணியாற்றி உள்ளார். இவரது சிறந்த பணிக்காக இரண்டு முறை இந்திய ஜனாதிபதி விருதினை பெற்று உள்ளார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பணியாற்றிய கால கட்டத்தில் அவர் பல மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்தினார். இதன் காரணமாக அப்போது அவர் திருச்சி மாநகர மக்களின் நண்பனாகவே இருந்து மக்கள் பணியாற்றினார்.

சங்கர் ஜிவால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த போது திருச்சி எனக்கு புதிய ஊர் அல்ல. எனது சொந்த ஊர் உத்தரகாண்ட் மாநிலம் என்றாலும் நான் பொறியியல் பட்டப்படிப்பினை முடித்ததும் பெல் எனப்படும் திருச்சி பெல்லில் தான் பொறியாளராக முதன் முதலாக சிறிது காலம் பணியாற்றினேன். அதன் பின்னர் தான் ஐ.பி.எஸ். தேர்வெழுதி போலீஸ் அதிகாரியாக வந்துள்ளேன் என்றார். இது நமது புதிய டி.ஜி.பி. சங்கர் ஜிவாலின் கடந்த கால வரலாறு ஆகும்.

காவல் துறை அதிகாரிகளுக்கே உரிய கடு கடு முகம், மிடுக்கு இவரிடம் கிடையாது. ஆனால் சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர் என்பதால் இவர் உண்மையிலேயே மக்களின் நண்பனாக காவல் துறையை தமிழக முழுவதும் மாற்றிக்காட்டுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டு உள்ளது.

Tags

Next Story