1 இல்ல இனி 3..! யூடியூப்பில் அதிரடி மாற்றம்..! கொண்டாட்டம்தான்..!

1 இல்ல இனி 3..! யூடியூப்பில் அதிரடி மாற்றம்..! கொண்டாட்டம்தான்..!
X
1 இல்ல இனி 3..! யூடியூப்பில் அதிரடி மாற்றம்..! கொண்டாட்டம்தான்..!

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுக்கு போட்டியாக 1 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை கொண்டு வந்தது யூடியூப். இதன் மூலம் பலரும் 1 நிமிட வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் நிறைய பார்வையாளர்களைப் பெற்று வந்தனர். இந்நிலையில் அதிரடியாக யூடியூப் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வருகிறது. அதுவும் மிக விரைவில். என்ன மாற்றம் எப்போது இருந்து நடைமுறையாகிறது என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

60 விநாடிகள் வரையிலான வீடியோக்களில் இதுவரை கவனம் செலுத்தி வந்த யூடியூப் தற்போது 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவிடும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தில் ஆப்களில் ஒன்றான யூடியூப் பயனர்களின் வசதிகளுக்கேற்ப பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் நீண்ட நேர வீடியோக்களுக்கு ஆதரவளித்து வந்த யூடியூப் பின்னாளில் ஷார்ட்ஸ் என்ற பெயரில் குறுகிய 1 நிமிட வீடியோக்களை பதிவிடும் வகையில் பயனர்களை ஊக்கப்படுத்தியது. இந்நிலையில் தற்போது அந்த 1 நிமிட வீடியோக்களை 3 நிமிடங்கள் வரையிலான நேரங்களில் பதிவிடலாம் என்று அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் இந்த மாற்றம் அனைத்து ஆப்களிலும் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

ஸ்கொயர் மற்றும் வெர்ட்டிகல் அமைப்பிலான வீடியோக்கள் இதனால் பாதிப்பை சந்திக்கும். அதேநேரம் ஏற்கனவே இருந்த வீடியோக்கள் பாதிக்கப்படாத வகையில் பல ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகவும் யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. செயல்படுத்தும் தேதிக்கு முன்னதாக பதிவிட்ட வீடியோக்கள் எதுவும் இதனால் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும்காலங்களில் நீண்ட ஷார்ட்ஸ்களுக்கான பரிந்துரைகளை மேம்படுத்துவதில் யூடியூப் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மறுவுருவாக்கம் செய்யும் பயனர்கள் இப்போதும் அதை செய்யமுடியும். அந்தந்த டெம்ப்ளேட்களை தேர்வு செய்து அதற்கேற்ப புதிய இசை, மற்றும் டிரெண்டுகளை தேர்வு செய்து வீடியோக்களை பதிவு செய்யலாம்.

விருப்பமான வீடியோக்களில் இருக்கும் ரீமிக்ஸ் பட்டனை அழுத்தி இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்து என்பதை கிளிக் செய்து இந்த தனித்துவமான அம்சங்களை பயன்படுத்த முடியும்.

மேலும் வரும் மாதங்களில் ஷார்ட்ஸ் கேமரா மூலம் அணுகக்கூடிய ஓர் சிறப்பம்சத்தை விரிவுபடுத்த யூடியூப் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் தங்களுக்கு பிடித்த வீடியோக்களிலிருந்து ரீமிக்ஸ் அம்சம் மூலம் பயனர்கள் பயனடையமுடியும். இதன் மூலம் அதிக அளவில் பயனர்கள் தொடர்ந்து யூடியூபை பயன்படுத்தும் நிலைமையைக் கொண்டு வர முடியும் என நம்பப்படுகிறது.

இது தவிர கூகுள் டீப் மைண்ட் மூலம் வீடியோ உருவாக்கும் ஏஐ மாடல் வியோ விரைவில் யூடியூபில் அறிமுகமாகும் என்கிறார்கள். இமேஜினரி செட்டிங்ஸ் மற்றும் தனித்துவமான வீடியோ கிளிப்புகள் மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை உருவாக்க இது பயன்படுகிறது.

மேலும் தங்களது முகப்பு பக்கத்தில் குறைவான ஷார்ட்ஸ்களைக் காட்டு என செட்டிங்க் மாற்றி அமைக்க முடியும் என்கிற அம்சத்தையும் யூடியூப் வழங்க இருக்கிறது. இதன்மூலம் குறிப்பிடத்தக்க ஷார்ட்ஸ் மட்டுமே அவர்களது டைம்லைனில் இடம்பெறும். இதனை வலதுபுறம் மேல்பக்கம் இருக்கும் மூன்று புள்ளிகள் மெனுவைக் கிளிக் செய்வதன் மூலம் அந்த விருப்பத்தை பயனர்கள் தேர்வு செய்யமுடியும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!