வந்தவாசியில் விமரிசையாக நடந்த ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம், விழாவில் திரளாக பங்கேற்ற பக்த பெருமக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅமிா்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, யாக சாலை பூஜைகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதில், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரவேச பலி, வாஸ்து சாந்தி, அங்குராா்பணம், கும்ப அலங்காரம் உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமை அஷ்டபந்தனம் சாற்றுதல், நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, பூா்ணாஹுதி உள்ளிட்டவையும் நடைபெற்றன.
பின்னா் புதன்கிழமை காலை விசேஷ திரவிய ஹோமம், யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் கலசங்களை தலையில் சுமந்து ஆலய வலம் வந்தனா்.
பின்னா் நேற்று காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா் கோயில் மகா கும்பாபிஷேகம்
செய்யாற்றை அடுத்த தவசி கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில் மற்றும் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் சந்நிதி மற்றும் புதிதாக கட்டப்பட்ட 31 அடி உயரம் கொண்ட ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜைகள் நடைபெற்று, பூா்ணாஹுதி முடிந்து கும்ப கலசங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து மூலவா் உற்சவா், விமான கலசங்களுக்கு கும்ப நீா் ஊற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து, 31 அடி உயரமுள்ள ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா் சிலைக்கு வைணவா்கள் பூஜை செய்து கும்பாபிஷேகம் நடத்தி தீபாராதனை காண்பித்தனா். அப்போது, கூடியிருந்த பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு ஆஞ்சநேயரை வழிபட்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu