அரசு மகளிர் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு கலையரங்கம் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

அரசு மகளிர் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு கலையரங்கம் திறப்பு: எம்எல்ஏ  பங்கேற்பு
X

ஆதமங்கலம்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  கலைஞர் நூற்றாண்டு கலையரங்கை எம்எல்ஏ சரவணன் திறந்து வைத்தார்.

Kalaignar Centenary Auditorium Inauguration அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய கலைஞர் நூற்றாண்டு கலையரங்கை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Kalaignar Centenary Auditorium Inauguration

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய கலைஞர் நூற்றாண்டு கலையரங்கை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ 7 லட்சத்தில் புதிய கலைஞர் நூற்றாண்டு கலையரங்கை எம்எல்ஏசரவணன், திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், தலைமை தாங்கினார் . ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கல்பனா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கை திறந்து வைத்தும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது;

இந்த விழாவில் கலைஞர் நூற்றாண்டு நினைவு கலையரங்கம் பள்ளியின் ஆண்டு விழா விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்தப் பள்ளி தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் ,மாணவர்களும் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். எங்கள் பள்ளியில் ஒரு கலையரங்கம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் மற்றும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையினை ஏற்று நான் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் செய்து கொடுத்து வருகிறேன் .மேலும் உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். மேலும் படிக்கும் மாணவர்களுக்காக தமிழக முதல்வர் அவர்கள் ரூபாய் 37 கோடி நிதி ஒதுக்கி பல சலுகைகளை வழங்கி வருகிறார். அதில் காலை சிற்றுண்டி திட்டம்,நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், இலவச பஸ் பாஸ் வசதிகள் ,விலையில்லா மிதிவண்டி, கற்றல் கற்பித்தல், இல்லம் தேடி கல்வி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூபாய் 1000 என பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக தமிழக முதல்வர் அவர்கள் வழங்கி வருகிறார்கள்.

மேலும் மாணவர்கள் ஆகிய நீங்கள் தமிழக அரசு வழங்கும் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு சிறந்த முறையில் படித்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story