/* */

காலாவதியான இனிப்புகளை விற்றால் நடவடிக்கை; அதிகாரிகள் எச்சரிக்கை

காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது. காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

HIGHLIGHTS

காலாவதியான இனிப்புகளை விற்றால் நடவடிக்கை; அதிகாரிகள் எச்சரிக்கை
X

காலாவதியான இனிப்பு பலகாரங்களை விற்க கூடாது.

தீபாவளி பண்டிகை காலத்தில் புத்தாடை, பட்டாசு விற்பனை மட்டுமின்றி, இனிப்பு காரம் பலகார வகைகளின் விற்பனையும் அமோகமாக நடந்தது. சிலர், வீடுகளிலேயே பட்சணங்களை தயார் செய்த நிலையில், பெரும்பாலான மக்கள், பலகார கடைகளை நாடிச்சென்றனர். இதனால், வழக்கமாக, ஆண்டுதோறும் பலகார கடைகளில், தீபாவளி பலகார விற்பனை பலமடங்கு அதிகரிக்கும். இதற்காக, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே, பலகார கடைகளில் தீபாவளி விற்பனைக்காக இனிப்பு, கார பலகார வகைகள் தயார் செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு தயார் செய்யப்பட்டு, விற்பனைக்கு போக மீதம் இருக்கும் காலாவதியான இனிப்பு, கார வகை பலகாரங்களை விற்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளகோவிலை அடுத்துள்ள முத்தூர் பகுதிகளில் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் பலகார கடைகள், உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகைக்கு தயார் செய்த அனைத்து வகையான காலாவதியான இனிப்பு, காரம் உட்பட அனைத்து தின்பண்டங்கள், உணவுப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் காலாவதியான இனிப்பு, கார உணவு பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்வதை தவிர்த்தல் வேண்டும். காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது.

கிராமப்புறங்களில் உள்ள சிறு, பெரிய இனிப்பு, காரம் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை கடைகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனைக்காக வைக்கப்பட்ட பலகாரங்களை உடனே அகற்றி அழிக்க வேண்டும். எனவே காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு இதையும் மீறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தல், சீல் வைத்தல், கடை உரிமம் ரத்து செய்தல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக மேற்கொள்ளப்படும் என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் சோதனை நடத்தப்படுமா?

முத்துார் மட்டுமின்றி மாவட்ட தலைநகரமான திருப்பூர் மற்றும் அருகில் உள்ள அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட நகரங்களில், ஏராளமான பலகார கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் ஓட்டல்கள் செயல்படுகின்றன. இதில், காலாவதியான உணவு பொருட்கள், இனிப்பு, கார பலகாரங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனி வகைகள் விற்கப்படுகிறது. ஓட்டல்களில் கெட்டுப்போகும் நிலையில் உள்ள உணவு பொருட்களை, குறிப்பாக, பிரிட்ஜில் வைக்கப்பட்ட இறைச்சி வகைகளை, ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. அதேபோல், கறிக்கோழி பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன கோழிகளை, குறைந்த விலைக்கு வாங்கி இறைச்சிக்கடைகளில் விற்கப்படுகிறது. இவை, ரோட்டோர தள்ளுவண்டி கடைகளில், சில்லியாக வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது. இதை வாங்கி சாப்பிடும் முதியவர்கள், குழந்தைகளின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

எனவே, காலாவதியான இனிப்பு, பலகார விற்பனையை தடுக்க கடைகளில் சோதனை நடத்தப்படுவதோடு, இறைச்சி கடைகள், ஓட்டல்களிலும் அதிரடி சோதனை நடத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On: 30 Oct 2022 7:58 AM GMT

Related News