/* */

திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இன்று திறக்கப்பட்டது

திருப்பூர் மாவட்டமாக மாற்றப்பட்ட பின்னர் நீதிமன்றங்கள் இருவேறு இடங்களில் செயல்பட்டு வந்த நிலையில், திருப்பூரில் 37 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இன்று திறக்கப்பட்டது

HIGHLIGHTS

X

திருப்பூர் மாவட்டமாக மாற்றப்பட்ட பின்னர் நீதிமன்றங்கள் இருவேறு இடங்களில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி திருப்பூர் பல்லடம் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். தற்போது 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 நீதிமன்றங்கள் , அலுவலகங்கள், கோப்புகள் வைப்பாறை , சொத்துக்கள் வைப்பரை, பயிற்சி மண்டபம் ,கூட்ட அரங்கம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறந்து வைக்கப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு திறந்து வைத்தார் . திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் , சுவாமிநாதன் , மாவட்ட நீதிபதி அல்லி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்டத்திற்கு 37 கோடி மதிப்பில் நீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

Updated On: 19 Dec 2020 9:47 AM GMT

Related News