/* */

நெல்லை மாநகராட்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிகள் செலுத்தலாம்: ஆணையாளர் தகவல்

நெல்லை மாநகராட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிகள் செலுத்தலாம் என்று ஆணையாளர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிகள் செலுத்தலாம்: ஆணையாளர் தகவல்
X

2021-2022ம் ஆண்டிற்கான வரிவசூல் வரும் 31.03.2022ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் தொழில்வரி மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் மற்றும் மாநகராட்சி கடை வாடகை ஆகிய வரி மற்றும் வரியில்லா இனங்களை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மேலும் சொத்துவரி மற்றும் இதர வரியினங்களில் நெடுங்காலமாக வரி செலுத்தாமல் உள்ள வரிவிதிப்புதாரர்களின் குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் வரிகளை சிரமம் இன்றி செலுத்துவதற்கு ஏதுவாக வருகிற 2022ம் ஆண்டு மார்ச் 31 வரை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் மாநகராட்சி கணனி வரி வசூல் மையங்கள் அனைத்தும் செயல்படும் என்று திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 March 2022 2:15 PM GMT

Related News