திருச்சி மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 33 வார்டுகள்

திருச்சி மாநகராட்சி தேர்தலில்  பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட  33 வார்டுகள்
X

திருச்சி மாநகராட்சி  கட்டிடம் (பைல் படம்).

திருச்சி மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 வார்டு ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விரைவில் பேரூராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாநகராட்சி இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் பெண்களுக்கே ஒதுக்கப்பட்டு இருந்ததால் இதுவரை பெண் மேயர்களே அந்த பதவியை அலங்கரித்து வந்தனர். இந்நிலையில் தற்போது முதன் முறையாக திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் நடைபெற உள்ள தேர்தலில் ஆண் மேயர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் 33 வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வார்டு எண்கள் 1, 3,4,7 ,9,11,13,18,21,22,24,26,30,31,32,33,37,44,45,49,50,51,52,53,56,58,59,63,64, ஆகிய 29 வார்டுகள் பெண்கள் பொது பிரிவிற்கும், வார்டு எண்கள் 6,8,15,62 ஆகிய 4 வார்டுகள் பெண்கள் எஸ்.சி. பிரிவிற்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இது தவிர எஸ்.சி. பொது பிரிவில் போட்டியிட 17,42,65 ஆகிய 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் இந்த 36 தவிர மீதம் உள்ள 29 வார்டுகள் அனைத்து சமூக மக்களும் போட்டியிடக்கூடிய பொது பட்டியலில் உள்ளன.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி