திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து
X
திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக ஆணையர் முஜிபுர் ரகுமான் அறிவித்து உள்ளார்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் கோட்டம் சங்கிலியாண்டபுரம் சர்வீஸ் சாலை அருகில் செல்லும் 500 எம்.எம். விட்டமுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக தேவதானம், விறகுபேட்டை, உக்கடை, சங்கிலியாண்டபுரம், ஜெகநாதபுரம், மலையப்ப நகர், சஞ்சீவி நகர், மகாலட்சுமி நகர் செந்தண்ணீர்புரம், கல்லுக்குழி ஆகிய பகுதிகளுக்கு 21 -10 -2021 நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி