நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க அழைப்பு

நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க அழைப்பு
X

பைல் படம்.

நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் எம்பி ப.குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாளை 18.4.2022 - திங்கட்கிழமை, காலை 8.00 மணி அளவில் முசிறி பாலம் அருகில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story