/* */

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி அலகு மூட உத்தரவு : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி அலகு இன்றுடன் மூட உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி அலகு மூட உத்தரவு : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
X

 மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி செய்த அலகு இன்றுடன் மூட உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஆக்சிசன் உற்பத்தி செய்யும் அலகு திறக்கப்பட்டது.

கடந்த மே மாதம் 13 ம் தேதி முதல் முதல் அலகில் ஆக்சிஜன் செயல்பட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற ஆணையின் வழங்கப்பட்ட காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் வேதாந்தா நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்ட அலகு இன்றுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 31 July 2021 1:25 PM GMT

Related News