/* */

3052 பேர் தபால் வாக்குப்பதிவுக்கு விண்ணப்பம்- கலெக்டர்

3052 பேர் தபால் வாக்குப்பதிவுக்கு விண்ணப்பம்- கலெக்டர்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் 3052 பேர் தபால் வாக்குப்பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர் என கலெக்டர் செந்தில்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு குறித்த ஒளிபரப்பு செய்திகளை பதிவு செய்யப்பட்ட ஒலிவடிவில் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் வீடுகள் தோறும் சென்று தினமும் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சுகாதார பணியாளர் குப்பை சேகரிக்க முடியும் என்பதால் மாநகராட்சி ஆணையர் சரண்யா ஹரி முயற்சியின் பேரில் வீடுகள் முழுவதும் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்டிப்பாக பொதுமக்கள் அனைவரும் ஏப்ரல் 6-ஆம் தேதி மனசாட்சியுடனும், நேர்மையுடனும் வாக்களிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 3052 முதியோர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர். அவர்களிடமிருந்து தபால் வாக்குகளை பெறுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் அனைத்தும் அரசியல் கட்சியினர் முன்னிலையிலேயே பதிவு செய்யப்படும் என்றார்.

Updated On: 27 March 2021 5:20 AM GMT

Related News