/* */

மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ. 2.31 லட்சம் அபராதம்

மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ. 2.31 லட்சம் அபராதம்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் மாஸ்க் அணியாத 1156 பேருக்கு ரூ. 2.31 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500/- அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் மாஸ்க் அணியாததாக தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 382 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 82 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 85 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 54 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 135 , கோவில்பட்டி உட்கோட்டத்தில் 226 , விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 139 , சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 53 பேர் மீதும் என மொத்தம் 1156 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 2 லட்சத்து 31ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததாக தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 3 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் ஒருவர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் ஒருவர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 5 பேர் , விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 2 பேர் என மொத்தம் 12 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 April 2021 4:43 AM GMT

Related News