/* */

கம்யூனிஸ்ட் பேரணிக்கு கடைவீதிதான் கிடைத்ததா?நெரிசலால் திணறிய மக்கள்

திருவாரூரில், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணியால், ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாமல் சிரமம் உண்டானது.

HIGHLIGHTS

கம்யூனிஸ்ட் பேரணிக்கு கடைவீதிதான் கிடைத்ததா?நெரிசலால் திணறிய மக்கள்
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியால், வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

பெட்ரோல் ,டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை ஏற்றத்தை கண்டித்து, திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இன்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில், இருசக்கர வாகனம் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து எடுத்துச் செல்லப்பட்டது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் சிவபுண்ணியம், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் நகராட்சி பகுதியில் துவங்கிய இப்பேரணி, முக்கிய கடைவீதி வழியாக வந்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது .தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் கடைவீதிகளில் குவிந்துள்ள நேரத்தில் நடந்த பேரணியால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்களும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசாரும் திணறினர்.

அந்த நேரத்தில், மகப்பேறு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் ஒன்று திருவாரூர் நகர் பகுதியின் மையத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றது. பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. எனவே, அரசியல் கட்சிகள் பேரணி நடத்தும்போது, பண்டிகை காலம், மக்கள் நடமாடும் பகுதி போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதை கருத்தில் கொண்டு அனுமதி தர வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 30 Oct 2021 12:00 PM GMT

Related News