ராமர் என்பவர் யார்....? ராமநாமத்தின் புதிய மகிமை
அயோத்தி கோயில் கருவறையில் அலங்காரத்துடன் குழந்தை ராமரின் முதல் தரிசனம்.
Features Of Ayodhi Ramar Temple
ராமா என்ற நாமத்தை மூன்று முறை கூறினால் 1000 முறை கூறியதற்கு சமம். ராம நாமத்தை நாம் முழு பக்தியுடன் ஜெபித்தால் நமக்கு மோட்சம் உண்டு. “ராம நாமம் எல்லா நாம ஜபங்களை விட இனிமையானது” என ராம நாமம் சொல்வது மகா விஷ்ணுவின் மற்ற 1000 நாமங்களை சொல்வதற்குச் சமம்.
இராமர் கோயில் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான குழந்தை இராமர் அயோத்தியில் பிறந்த இடமான ராம ஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ளது மாபெரும் இந்துக் கோயில் ஆகும். இது இந்தியாவின் உத்தரப் ரதேச மாநிலத்தில், அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான அயோத்தி நகரத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
மைசூரு பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.ஸ்ரீகந்தப்பா, "மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்துள்ள ராமர் சிற்பம் தான் அயோத்தி ராமர் கோயில் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 300 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் இருந்து செதுக்கப்பட்டது. மைசூருக்கு தென் மேற்கே உள்ள சர்கூர் நகரைச் சுற்றி இத்தகைய பாறைகள் அதிகம் உள்ளன.
குழந்தை ராமர் சிலையை செதுக்கப் பயன்படுத்தப்பட்ட பாறை 300 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதும், தென்னிந்தியாவின் பழமையான பாறை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி இராமர் கோயிலுக்கான அசல் வடிவமைப்பு 1988ம் ஆண்டு அகமதாபாத்தைச் சேர்ந்த சோம்புரா குடும்பத்தின் சந்திரகாந்த் சோம்புராவால் தயாரிக்கப்பட்டது. கோயில் கட்டிடக் கலைஞர்களான அவரது மகன்கள் நிகில் சோம்புரா மற்றும் ஆசிஷ் சோம்புரா உதவியாக உள்ளனர். சோம்புரா குடும்பத்தினர் 15 தலைமுறையாக கோயில் கட்டுமானத் தொழிலைச் செய்பவர்கள். சோம்புரா குடும்பத்தினர் இந்திய விடுதலைக்குப் பின்னர் சோம்நாதர் கோயிலை கட்டியவர்கள். இக்குடும்பத்தினர் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கோவில்களை கட்டியுள்ளனர். அதில் புகழ் பெற்றது தில்லி அக்சர்தாம் கோயில் ஆகும்.
அசல் கட்டுமான வரைபடத்திலிருந்து சில மாற்றங்களுடன் புதிய வடிவமைப்பு, வாஸ்து சாஸ்திரம் மற்றும் சிற்ப சாஸ்திரங்களின்படி, 2020 இல், சோம்புரா குடும்பத்தினரால் கோயில் கட்டிட வரைபடம் தயாரிக்கப்பட்டது. புதிய அயோத்தி இராமர் கோயில் 235 அடி அகலமும், 360 அடி நீளமும், 161 அடி உயரமும் கொண்டதாக கோயில் அமைந்துள்ளது. இராமர் கோயில் வளாகம் உலகின் மூன்றாவது பெரிய இந்து ஆலயமாக இருக்கும். இது வட இந்திய கோவில் கட்டிடக்கலையின் சாளுக்கிய-குஜராத்தியப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பிரதான அமைப்பு ஒரு உயர்ந்த மேடையில் கட்டப்பட்டு மூன்று மாடிகளைக் கொண்டுள்ளது. இதன் நடுவில் உள்ள கருவறையைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் உள்ளன. கருவறைக்கு மேல் 161 அடி உயர கோபுரம் உள்ளது. கட்டிடத்தில் மொத்தம் 366 நெடுவரிசைகள் உள்ளன. சிவனின் அவதாரங்கள், விஷ்ணுவின் 10 தசாவதாரங்கள், 64 சௌசத் யோகினிகள் மற்றும் சரசுவதி தேவியின் 12 அவதாரங்கள் அடங்கிய பத்திகளில் தலா 16 சிலைகள் இருக்கிறது. படிக்கட்டுகளின் அகலம் 16 அடியாக இருக்கிறது. விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களின் வடிவமைப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்ட வேதங்களின்படி, கருவறை எண்கோண வடிவில் உள்ளது.
200கிலோ எடை சிலை
2024ம் வருடம் ஜனவரி மாதம் 22-ம் தேதி திங்கள் கிழமை மதியம் 12.20 மணி அளவில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜை மதியம் ஒரு மணி அளவில் நிறைவடைந்தது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட 200 கிலோ எடையுள்ள குழந்தை ராமர் சிலை, ஆகம விதிமுறைப்படி ராமர் கோயிலுக்குள் நிறுவப்பட்டது. அருண் யோகிராஜ் வடித்துள்ள குழந்தை ராமர் சிலை 51 அங்குல உயரம் கொண்டது ஆகும். கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலைக்கு கணேச - அம்பிகா பூஜை, வருண பூஜை போன்ற பூஜைகள் 4 மணி நேரம் நடைபெற்றன.
ராம நாமம் மற்ற மூல மந்திரங்களுக்கெல்லாம் மூத்த மந்திரம் என கம்பரால் புகழப்படுகிறது. ராம நாமத்தை உச்சரித்தால் நம் உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு, இன்பதை தரும். நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே. திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே "ராம" என்ற இரண்டு எழுத்தினால்.
ராம....ராம...ராம....ராம...
ராம...ராம...ராம...ராம...
ராம...ராம...ராம...ராம...ராம....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu