சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தலைமை செயலகம் (கோப்பு படம்).
சென்னையில் மிக்ஜாம் புயலால் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக நாளையும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அருகே வங்க கடலில் உருவாகி உள்ள மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை விடிந்த பின்னர் இப்போது வரை பெய்து கொண்டிருக்கிறது. மழையின் காரணமாக சென்னை நகரமே வெள்ளக்காடாகி உள்ளது எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருந்து வரும் மக்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பேரிடர் மீட்பு படை குழுவினர் அவர்களை படகுமூலம் மீட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை காற்றுடன் பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் இன்று இரவு வரை மழை தொடர்ந்து பெய்யும் என அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிஜாம் புயல் நாளை பிற்பகல் தான் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்றும் அதுவரை மழை பெய்து கொண்டுதான் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
இதன் காரணமாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பலத்த மழை காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு டிசம்பர் நான்காம் தேதியான இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் இன்று திறக்கப்படவில்லை. தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்யும்படி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் அல்லது விடுமுறை விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழை பாதிப்பு தொடர்வதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நாளையும் (டிச.5)அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu