/* */

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நகர மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு

பல இடங்களில் தெரு விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்த பகுதியாக உள்ளது, அந்த பகுதிகளில் புதிதாக மின்சார விளக்குகள் ஏற்பாடு செய்திட கோரிக்கை.

HIGHLIGHTS

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நகர மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு
X

தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட காட்சி.

தமுமுக 11வது வார்டு கிளை மற்றும் ஆபாத் பள்ளிவாசல் ஜமாத் சார்பாக அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிரிடம் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

1) தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வார்டு மறுசீரமைப்பு செய்ததில் பல்வேறு தெருக்கள் எந்த வார்டில் அமைந்துள்ளது என்று மக்களுக்கு தெரியாத சூழ்நிலையில் உள்ளது ஆகவே இப்பொழுது புதிதாக பிரிக்கப்பட்ட வார்டு எண் மற்றும் தெருபெயர் பலகை அமைத்து அனைத்து பகுதிகளிலும் வைத்துக் கொடுத்து மக்கள் தெரிந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்துதர வேண்டும்

2) தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 10,11,ஆகிய வார்டுகளில் (பேவர் பிளாக்) தளக்கள் சாலையில் மிகவும் சேதம் அடைந்து உள்ளது அதனை சரி செய்வதற்கு பணியாணை பெற்றும் இதுவரைக்கும் எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை அதனையும் உடனடியாக சரிசெய்துத் தர வேண்டும்

3) 11வது வார்டு ஆபாத் பள்ளிவாசல் 2ம் தெரு பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனை உள்ளது அந்த பகுதியில் மக்கள் குடிதண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். புதிதாக தண்ணீர் குழாய் அமைத்து அந்த பகுதி மக்களுடைய குடிநீர் பிரச்சினையை சரி செய்து தரவேண்டும்.

4) மேலும் 10 மற்றும் 11 வது வார்டு பகுதியில் பல இடங்களில் தெரு விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்த பகுதியாக உள்ளது அந்த பகுதிகளில் புதிதாக மின்சார விளக்குகள் ஏற்பாடு செய்திட வேண்டும்.

5) தென்காசி நகர் பகுதியில் இரவு நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது இதனால் மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத சூழ்நிலைகள் உள்ளது ஆகவே இதனை கருத்தில் கொண்டு பகல் நேரங்களில் குடிநீர் வழங்கி மக்கள் பயன்பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்

6) மேலும் தென்காசி நகர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லைகள் மிகவும் அதிகமாக உள்ளது அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து நகர்மன்றத் தலைவர் சாதீர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது

இதற்கு தமுமுக மாவட்ட தலைவர் முன்னால் நகர்மன்ற உறுப்பினர் சலீம் அவர்கள் தலைமை தாங்கி கோரிக்கை மனுவை நகர்மன்றத் தலைவர் சாதிர் அவர்களிடம் அளித்தார்கள். இதில் ஆபாத் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சவுக்கத் அலி ஜமாத் துணைச் செயலாளர்கள் இஸ்மாயில் பெனாசிர் சவுக்கத் அலி, மற்றும் ஜமாத் செயற்குழு உறுப்பினர்கள் ஆசாத், ரகுமான் கனி, ஷாஜகான்,முகமது அலி,மற்றும் தமுமுக நிர்வாகிகள் சமீர், முபிஸ், அஸரப், நபில் அஜி, இப்ராஹிம், உசேன், தமீம், சமீர் ஷேக், நசுரில்லா,மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.நகர் மன்றத்தலைவர் மற்றும் ஆனையாளர் அவர்கள் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்தித்தப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

Updated On: 17 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!