/* */

இளையான்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பவள விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன்

இளையான்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பவள விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்றார்.

HIGHLIGHTS

இளையான்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பவள விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன்
X

இளையான்குடி அரசு மேல்நிலைப்பள்ளி விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் விழா மலரை வெளியிட்டார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75-வது ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் முன்னிலையில் இன்று நடைபெற்ற 75-வது ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில், பங்கேற்று சிறப்பித்தார்.

விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில் தமிழக அரசு, அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. அதில், கூடுதலாக சிறப்பு சேர்க்கின்ற வகையில் கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டையும் தனது இரு கண்களாக கொண்டு, அதில் பல்வேறு சிறப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர்.

தற்போதைய நிதியாண்டில் பள்ளிக்கல்விக்கென மட்டும் ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக, பெண்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் , விவசாயம், தொழில், கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முன்னேறிய மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் திகழ்ந்து வருகிறது.

இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் தற்போது 75வது பவள விழா கடந்த மூன்று தினங்களாக பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பள்ளியை, பொறுத்தவரையில் கடந்த 1947-ல் இளையான்குடி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி என்ற பெயருடன் தொடங்கப்பட்டு, கே.எம்.கே அப்துல் கரீம் அவர்கள் முதல் தாளாளராக இருந்து பள்ளியை வழிநடத்த தொடங்கினார். அச்சமயம், சிவகங்கை மன்னர் மேதகு சண்முகராஜா அவர்கள் சுமார் 14 ,12 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக தானமாக வழங்கினார்.

இளையான்குடி முஸ்லிம் கல்விச் சங்கமும் உருவானது. இளையான்குடி பகுதியில் கல்வி சார் ஆர்வலர் பெருமக்கள் பெரும் முயற்சியுடன் 12-ம் வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இளையான்குடி உயர்நிலை பள்ளி சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை உயர்கல்வி பயில ஆர்வமூட்டுகின்ற வகையில் இப்பள்ளி சிறந்து விளங்கி வருகிறது.

இப்பள்ளியில், பயில்கின்ற மாணாக்கர்களாகிய நீங்கள் சாதனையாளர்களாக திகழ வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் கனவை நினைவாக்குகின்ற வகையில் சிறப்பான முறையில் பயின்று தாங்கள் பயின்ற பள்ளிக்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் சிறந்து விளங்கிட வேண்டும்.

மேலும், அரசுடன் இணைந்து மாணாகர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, அரசிற்கு உறுதுணையாக இருந்து வரும் கொடையாளர்களுக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது 75-வது ஆண்டு பவள விழா காணும் இப்பள்ளி, இன்னும் நூற்றாண்டு விழாவினை நோக்கி சிறப்பாக பயணித்து, நூற்றாண்டு விழாவினையும் சிறப்பாக அனைவரும் கொண்டாடுவோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து, சிறப்பாக இப்பள்ளியை நடத்தி வரும் பள்ளி நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, மேலும் இப்பள்ளியில் கூடுதலாக அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், இளையான்குடி பேரூராட்சித் தலைவர் பி.ஏ.நஜூமுதீன், இளையான்குடி முஸ்லீம் கல்விச் சங்கத் தலைவர் டி.எஸ்.டி.கஸ்னவி, இளையான்குடி மேல்நிலைப்பள்ளி தாளாளர் டி.எஸ்.ஹச்.முசாபர் அப்துல் ரகுமான், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் மீ.உதயக்குமார், பள்ளி தலைமையாசிரியர் ஏ.முஹம்மது இல்யாஸ், மானாமதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, இளையான்குடி வட்டாட்சியர் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தா மேரி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 July 2023 10:57 AM GMT

Related News