/* */

தொடரும் நாட்டரசன்கோட்டை பாரம்பரியம்

செவ்வாய் பொங்கலன்று பாரம்பரியமாக மணமாலை பொருத்தம் பார்க்கும் நிகழ்வு இன்று வரை நாட்டரசன்கோட்டையில் தொடர்வது சிறப்பு.

HIGHLIGHTS

தொடரும்  நாட்டரசன்கோட்டை பாரம்பரியம்
X

சிவகங்கை அருகே பழமை மாறாமல் நடைபெறும் செவ்வாய் பொங்கலில் ஏராளமான நகரத்தார்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்ததுடன் தங்களது பிள்ளைகளுக்கு பாரம்பரிய முறைப்படி வரன் பார்த்த நிகழ்வு நடைபெற்றது.

சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன்கோட்டையில் நகரத்தாரின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழாசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஒரே சமயத்தில் 917 பேர் பொங்கல் வைத்தனர். நாட்டரசன்கோட்டை பகுதியில் அதிகளவில் நகரத்தார் வசிக்கின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து முதல் செவ்வாய்க் கிழமை செவ்வாய் பொங்கல் விழா கொண்டாடுகின்றனர்.

இதற்காக திருமணம் முடிந்த நகரத்தாரின் குடும்பத்தினரை ஒரு புள்ளியாக கணக்கிடுவர். அவர்களின் பெயரை சீட்டில் எழுதி வெள்ளி பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர். முதல் சீட்டில் வருவோர் கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன்பாக முதல் பானையாக பொங்கல் வைப்பர்.

அதன்படி நடந்த பொங்கல் விழாவில் முதல் சீட்டில் தேர்வான சொக்கலிங்கம் குடும்பத்தினர் மண்பானையில் பழமை மாறாமல் பொங்கல் வைத்தனர். அதைத்தொடர்ந்து 917 நகரத்தார் குடும்பத்தினர் வெண்கலம், சில்வர் பானைகளில் பொங்கல் வைத்தனர். மேலும் மற்ற சமூகத்தினரும் அவர்களுக்கு அருகிலேயே தனி வரிசையில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மேலும் இந்த விழாவில் உறவினர்கள் குசலம் விசாரித்து வரன் பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நகரத்தார்கள் பல்வேறு நாடுகளில் தொழில் நிமித்தமாக இடம் பெயர்ந்திருந்தாலும் இந்த செவ்வாய் பொங்கலுக்கு வந்து ஆண்டுதோறும் கலந்துகொள்வதுடன் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏற்ற வரனை இந்த விழாவிலேயே பார்த்து இருவருக்கும் பிடித்திருந்தால் இங்கேயே பேசி முடிக்கும் நிகழ்வும் நடைபெறுவது இந்த விழாவின் தனிச்சிறப்பாகும். இந்த ஆண்டும் ஏராளமானோர் பொங்கல் விழாவில் கலந்துகொண்டதுடன் தங்களது உறவுகளை கண்டு பேசி மகிழ்ந்தனர்.

Updated On: 19 Jan 2021 4:43 PM GMT

Related News