/* */

ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம் வென்று முதல்வர் அறிவித்த ரூ. 3 கோடி பரிசை பெற வேண்டும்: அமைச்சர் மெய்யநாதன்

ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் பெறும் தமிழக வீரர்களுக்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்யாத வகையில் தமிழக அரசால் முன்கூட்டியே பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

HIGHLIGHTS

ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம் வென்று  முதல்வர் அறிவித்த  ரூ. 3 கோடி பரிசை பெற வேண்டும்: அமைச்சர் மெய்யநாதன்
X

ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம் வென்று, முதல்வர் அறிவித்த ரூ. 3 கோடி பரிசை அனைவரும் பெறுவார்கள் என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் பெறும் தமிழக வீரர்களுக்கு, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்யாத வகையில் தமிழக அரசால் முன்கூட்டியே பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றார் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கான நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி போடும் முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் மேலும் கூறியதாவது: டோக்கியோவில் இன்று ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள் ளது.தமிழக வீரர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் அனைவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக வீரர்கள் 12 பேரும் டோக்கியோவில் பாதுகாப்பாகவும் நலமுடனும் உள்ளனர்.தமிழக வீரர்கள் மட்டுமல்ல இந்தியாவில் இருந்து சென்றுள்ள அனைத்து வீரர்களுமே பதக்கங்களுடன் நாடு திரும்புவார்கள் என முழுநம்பிக்கை உள்ளது.

இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் செய்யாத வகையில், முன்கூட்டியே ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுக்கு, தங்கப்பதக்கம் வென்றால் மூன்று கோடி ரூபாய் வெள்ளிப் பதக்கம் வென்றால் இரண்டு கோடி ரூபாய் வெண்கல பதக்கம் வென்றால் ஒரு கோடி ரூபாய் என்று பரிசு தொகைககள் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

Updated On: 23 July 2021 11:44 AM GMT

Related News