/* */

கல்லூரி மாணவ மாணவிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம்

கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் கட்டாயம் முதலாவது தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கல்லூரி மாணவ மாணவிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம்
X

தடுப்போசி செலுத்த வரிசையில் காத்திருக்கும் மாணவ, மாணவியர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரியில் புதிதாக சேரும் மாணவ மாணவிகள் மற்றும் ஏற்கனவே கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் எல்லா கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அதேபோன்று கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் கட்டாயம் முதலாவது தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 26 ஆயிரத்து 234 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால் கல்லூரியில் புதிதாக சேரும் மாணவ மாணவிகள் மட்டுமல்லாது ஏற்கனவே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் தற்போது நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளதால் கல்லூரி மாணவ மாணவிகளிடையே தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் ஏராளமான கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் மட்டுமல்லாது புதிதாக கல்லூரியில் சேரும் மாணவ மாணவிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

Updated On: 29 Aug 2021 7:28 AM GMT

Related News