தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை- குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை , குற்றாலம், பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம், கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது முழு ஊரடங்கு இருப்பதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வியாபாரிகள் இல்லாமல் குற்றால அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டது
புயலின் தாக்கம் : பருவநிலையில் மாற்றம்
புயலின் தாக்கம் சாரலின் தூரலாக தென்காசி மாவட்டத்தில் காலை 3 மணி முதல் பூமித்தாயின் முகத்திலும், மரம் , செடிகொடிகளின் சரீரத்திலும் பன்னீர் தெளிப்பது போல் இதமான சாரல் தூரலாய் தூவி வருகிறது. மெல்லியக் காற்றின் வாடை மனிதர்கள் அணிந்த ஆடைக்குள் ஊடுருவி உடலின் உஷ்ணத்தை சமன் செய்து வருகிறது. இந்த ஆண்டு பருவநிலையில் மிகுந்த மாற்றம் கடுமையான வெயிலும் , விரட்டி அடிக்கும் காற்றும் காணாமல் போய்விட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu