அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா..!
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் தமிழ்க் கூடல் விழா நடந்தது.
குமாரபாளையம் அருகே வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் தமிழ்க் கூடல் விழா நடந்தது.
குமாரபாளையம் அருகே வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் தமிழ்க் கூடல் விழா, தலைமையாசிரியர் (பொ) மாதேசு தலைமையில் நடந்தது. எஸ்.எஸ். .எம். கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் . சங்கரராமன் பங்கேற்று, “தமிழ் எங்கள் உயிருக்கு நேர் “என்னும் தலைப்பில் பேசினார். பேச்சு, கட்டுரை, கவிதை, திருக்குறள் ஒப்புவித்தல், பாடல் பாடுதல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பி.டி.ஏ. தலைவர் காந்தி நாச்சிமுத்து, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் மணிமேகலை, ஆசிரியர்கள் குமார், முத்து , முருகேசன், அருள் , தங்கராஜ் ஜெகதீஸ்வரன், சந்தானலட்சுமி, ராதா, அம்சா, பார்வதி உள்பட பெற்றோர்களும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
அரசு பள்ளி மாணவன் மலேசியா பயணம்
குமாரபாளையம் அருகே அரசு பள்ளி மாணவன் அரசு சார்பில் மலேசியா சென்றார்.
தட்டாங்குட்டை ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்கள் தமிழ்ச்செல்வன் தாமரைச்செல்வி தம்பதியர். இவர்களின் இளைய மகன் இளவரசன் வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறான்.
சென்ற ஆண்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும், பாரதியார் பாடல் ஒப்பவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் முதலிடமும் பெற்றான். மாவட்ட மாநில அளவில் வெற்றி பெற்றதால் தரப்புள்ளிகளின் அடிப்படையில் மாணவனுக்கு கலையரசன் விருது தமிழக முதல்வர் கையால் வழங்கப்பட்டது.
அவ்வாறு மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து மலேசியா அழைத்துச் செல்லப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu