உடல் தானம் செய்தவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்க மக்கள் நீதி மய்யம் கலெக்டரிடம் மனு

உடல் தானம் செய்தவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்க மக்கள் நீதி மய்யம் கலெக்டரிடம் மனு
X
உடல் தானம் செய்தவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்க மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நாமக்கல் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது

உடல் தானம் செய்தவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்க மக்கள் நீதி மய்யம் கலெக்டரிடம் மனு

உடல் தானம் செய்தவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்க மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நாமக்கல் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

குமாரபாளையம் பகுதியில் உள்ளவர்கள் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக உடல் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம் செய்வதற்கு மற்றும் உடல் நல பாதிப்புகளுக்கு சிறப்பு சிகிச்சை செய்வதற்கான அடையாள அட்டை வழங்க வேண்டும்.

உடல்தானம் செய்தவர்களுக்கு இது போன்ற சலுகைகள் செய்வதால் இன்னும் பல பேர் உடல் தானம் செய்வதற்கு முன் வருவார்கள். இதனால் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் இது குறித்து, தமிழக அரசிடம் எடுத்துரைத்து, அடையாள அடை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படவிளக்கம்:

மாவட்ட அமைப்பாளர், மகளிர் அணி, மக்கள் நீதி மய்யம் குமாரபாளையம் தொகுதி

Tags

Next Story