குமாரபாளையத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் அப்புராயர் சத்திரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 1008 திருவிளக்கு வழிபாடு நடந்தது.
குமாரபாளையத்தில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
அனுமன் ஜெயந்தியையொட்டி திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஷ்வரர் கோவிலில், சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், பஞ்சமுக ஆஞ்சேநேயர் கோவில் ஆகியன உள்ளன. இந்த கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. திருவள்ளுவர் நகர், வாசுகி நகர், நடராஜா நகர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில் உள்ள பெரிய அளவிலான ஆஞ்சநேயருக்கும், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. புத்தர் தெரு நடன விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டு வழிபாடு நடத்தபட்டது. பாலக்கரை அப்புராயர் சத்திரம் பகுதியில், கிருஷ்ணதேவராயர் மன்னரால் வணங்கப்பட்ட ஆஞ்சநேயர் கோவிலில் ஆயிரத்து எட்டு திருவிளக்குகள் ஏற்றப்பட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டது.
கோட்ட தலைவர் கஸ்தூரி ரங்கன், முன்னாள் மாவட்ட தலைவர் அஸ்வத், மாவட்ட பொருளர் ராஜேந்திரன், வக்கீல் நடராஜன், நிர்வாகிகள் பழனிச்சாமி, இளங்கோ, மணிகண்டன், கார்த்திகேயன், கோபாலக்ருஷ்ணன், சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் லட்சுமிநாராயணன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குமாரபாளையம் புத்தர் தெரு நடன விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu