பலத்த மழை காரணமாக நெல்லையில் இருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து

பலத்த மழை காரணமாக நெல்லையில் இருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து
பலத்த மழை காரணமாக நெல்லையில் இருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பல ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சில ரயில்கள் பகுதியாக மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படுகின்றன.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

இன்று 18.12.23 தென்காசி - திருநெல்வேலி இடையே அனைத்து ரயில்களும் ரத்து.

20684 செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் ராஜபாளையம் வழியாக வழி மாற்றம் செய்து இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி - செங்கோட்டை திங்கட்கிழமை அன்று இயக்கப்பட வேண்டிய முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ணவி கட்ரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மறு மார்க்கத்தில் டிசம்பர் 21 அன்று ஸ்ரீ வைஷ்ணவி கட்ரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.திருவனந்தபுரம் - திருச்சி இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. ‌

நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும்.

கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும்.

நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - பெங்களூர் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - தாதர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் டிசம்பர் 18 அன்று மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.

நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் திண்டுக்கலில் இருந்து இயக்கப்பட்டது.கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் இருந்து இயக்கப்படும். திருநெல்வேலி - ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்பட்டது. திருநெல்வேலி, மானாமதுரை, பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட வேண்டிய செங்கோட்டை - தாம்பரம் ரயில் ராஜபாளையம், விருதுநகர், மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

Tags

Next Story