பணம் இல்லாமல் தவித்த வெளி மாநிலத்தவர் களுக்கு உதவிய பள்ளித் தாளாளர்

பணம் இல்லாமல் தவித்த வெளி மாநிலத்தவர் களுக்கு உதவிய பள்ளித் தாளாளர்
உத்திரபிரதேசம் செல்ல வழியின்றி தவித்த மக்களுக்கு சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் உதவி செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தேசிய நான்குவழிச் சாலையில் உத்தரப்பிரதேசம் செல்ல வழியின்றி பத்துக்கு மேற்பட்ட நபர்கள் கால்நடையாக சென்று கொண்டு இருந்தனர். அவ்வழியாக வந்த சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவர் எம் .வி. எம். கலைவாணி பள்ளி தாளாளர் எம் மருது பாண்டியன் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு, உடனடி உதவியாக உணவு பிஸ்கட் பாக்கெட் மற்றும் அவர்களின் பயண செலவுக்காக ரூ. 5000 ரொக்கமாக வழங்கி உதவி செய்தார்.அவரது மனித நேய உதவியை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu