மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி...

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி...
X

அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டோர்.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தமிழ்நாடு அரசு அறிவியல் தொழில்நுட்பம் மையம் மற்றும் தேசிய இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்திய சிறப்பு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.


அறிவியல் கண்காட்சியை, மன்னர் கல்லூரி செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சியல், மதுரை காவல் துணை ஆணையர் ஆறுமுகசாமி, முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்ரமணியன், மன்னர் கல்லூரி கணித துறை தலைவர் ஹாமாரி சௌதி, தமிழ்நாடு அறிவியல் வளர்ச்சி கழகச் செயலாளர் சீனிவாசன், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின்போது, கல்பாக்கம் அணுமின் நிலைய உதவியுடன் தென் மாவட்ட மக்கள் அணு உலைகள் மற்றும் கதிர் விச்சுகள் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சியும் நடைபெற்றது. இந்தக் கண்காட்சி குறித்து, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜலஜா மதன் மோகன் கூறியதாவது:

அணுக்கதிரை கண்டு மக்கள் பயப்படத் தேவை இல்லை. அணு கதிர்வீச்சுகளை நவீன தொழில்நுட்பத்துடன் மருத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மக்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால் மக்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் முறைகள் தான் தற்போது உள்ளது.

அணு உலையில், இருந்து அணுக்கள் பிளக்கப்பட்டு கனநீர் மூலம் குளிர்வித்து மின்சாரம் தயாரித்தல் மற்றும் அணுக்கதிர்கள் மூலம் நவீன ஸ்கேன் கருவிகள் தயாரித்தல் போன்றவை சிறப்பு அம்சம். வரும்காலங்களில் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் படித்து ஆய்வு செய்ய முன் வந்தால் பல்வேறு சாதனைகள் புரியலாம். நிறைய வேலை வாய்ப்புகளும் உள்ளது. அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜலஜா மதன் மோகன் தெரிவித்தார்.

அணு சக்தி துறை குறித்து, மதுரையில் நடைபெறும் முதல் கண்காட்சி என்பதால் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மன்னர் திருமலை கல்லூரி கணிதவியல் மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!