மதுரை அருகே முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் பிறந்த நாள் : கோயில்களில் சிறப்பு வழிபாடு

மதுரை அருகே முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் பிறந்த நாள் : கோயில்களில் சிறப்பு வழிபாடு
X

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், ஓ.பி.எஸ். படத்துடன் தங்கத்தேர் இழுத்த அதிமுகாவினர்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ஓ.பி.எஸ். படத்துடன் தங்கத்தேர் இழுத்து அதிமுகாவினர் வழிபாடு நடத்தினர்

மதுரை அருகே ஒபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் சார்பில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ஓ.பி.எஸ். படத்துடன் தங்கத்தேர் இழுத்து அதிமுகாவினர் வழிபாடு நடத்தினர்.

அதிமுகவினர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் 72 -ஆஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஓ. பன்னீர்செல்வத்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்துடன் , உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், முன்னாள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

பல அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி தலைவர்கள் பிறந்த நாளுக்கு தங்கத்தேர் இழுத்து , பால்குடம் எடுப்பது வழக்கம். ஆனால் ஒ .பன்னீர்செல்வம் உருவப்படத்துடன் தங்கத் தேர் இழுத்தது பார்வையாளர்களை அதிர்ச்சியடையச்செய்தது. தொடர்ந்து, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும், அவரது பிறந்தநாளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

Tags

Next Story